உனக்கு எல்லாம் கதை சொல்ல முடியாதுயா!.. ரஜினியின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபலம்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பிரபலங்கள் மதிக்கும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபகாலமாக இவர் இளம் தலைமுறையினருக்கு கொடுத்து வரும் அறிவுரைகளால் மேலும் வளர்ந்து நிற்கிறார் என்று பெருமையாக பேசி வருகிறார்கள்.
இளமைக் காலத்தில் தான் செய்த தவறை இப்பொழுதுள்ள தலைமுறையினர் செய்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். தன்னிகரில்லா மனிதராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியின் படத்தில் ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தாலும் பரவாயில்லை என்னுமளவிற்கு அவரை தெய்வமாகவே கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் ரஜினியின் கால்ஷீட்டிற்காக பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவருக்கு கதை சொல்ல முடியாது என்று ஒரு பிரபலம் கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை , பிரபல கதாசிரியரான அன்னக்கிளி கே.செல்வராஜ்.
அன்னக்கிளி படத்தின் கதாசிரியர் தான் இவர். சினிமாவில் ஏகப்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். முக்கியமாக பெண்களை உயர்வாக வைத்தே இதுவரை கதை எழுதியிருக்கிறார். சமூக கருத்துக்கள் உடைய கதைகள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய கதைகளைத்தான் இவர் எழுதுவார்.
ரஜினிக்கு நெருக்கமானவராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம் செல்வராஜ் பெங்களூர் சென்ற போது ரஜினி அங்கு இருந்திருக்கிறார். அது அறிந்து இவரை பார்க்க வேண்டுமென்று ரஜினி சொன்னாராம். செல்வராஜ் ரஜினி தங்கியிருந்த ஒரு வீட்டிற்கு சென்றாராம். அந்த இடத்தில் தனியாக ரஜினி தங்கியிருந்த வீடு இருந்ததாம்.
அப்போது ரஜினி செல்வராஜிடம் எனக்காக ஏதாவது ஒரு கதை எழுதி தர முடியுமா? என கேட்டாராம். அதற்கு செல்வராஜ் உனக்கு எல்லாம் என்னால எழுத முடியாது, அது மட்டுமில்லாமல் நீ நடிக்கிற படங்களில் ஒர் அடியில் 40 பேர் போய் விழுக வேண்டும், அந்த மாதிரி எல்லாம் என்னால கதை எழுத முடியாது என்றும்,
இதையும் படிங்க : கதை சொல்லப் போன பாரதிராஜா!.. ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்த அந்த நடிகர்!..
பெண்களுக்கு வேண்டுமென்றால் எழுதுவேன் என்றும் கூறினாராம். மேலும் அவர் கூறும் போது ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி கதை எழுத முடியாது. இதே கமல், சிவாஜி இவர்கள் கதைகளுடன் கதாபாத்திரமாக மாறக்கூடியவர்கள். அவர்களுக்கு எழுதலாம். ஆனால் ரஜினிக்கெல்லாம் முடியவே முடியாது என்று ஒரு பேட்டியில் கூறினார்.