
Cinema News
விருமன் நாயகிக்கு மறைமுக தாக்குதல்.? இணையத்தில் கொந்தளித்த இளம் நடிகை.! பின்னணி சம்பவம் இதோ…
நடிகை ஆத்மிகா கல்லூரி காதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இந்த சூப்பர்ஹிட் படத்தில் ஆவர் ஹிப்-ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு ‘கோடியில் ஒருவன்’ போன்ற படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஆத்மிகா.
பொதுவாக, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை வருகிறார். ஆனால், நடிகையின் சமீபத்திய ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, அவர் போட்ட ட்வீட்டில் சினிமா துறையில் நிலவும் உறவுமுறையை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது உள்ளது போல் தெரிகிறது.
அட ஆமாங்க…. அவரது பதிவில், “பாக்கியமுள்ளவர்கள் ஏணி வழியாக சுலபமான வழியைப் பெறுவதைப் பார்ப்பது நல்லது, மீதமுள்ளவர்கள் பாத்துக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் எடுத்தவுடனே பெரிய நடிகர்களான கார்த்தி ,மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதால். அதிதி ஷங்கரை நோக்கி தான் ஆத்மிகாவின் ட்வீட் இருக்கிறது என்று ரசிகரக்ள் இணையத்தில் வசைபாடி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- முன்கோபம் வந்து பலரை அடிச்சிருக்கேன்.. பல உண்மைகளை உளறிய சிவகார்த்திகேயன் பட கவர்ச்சி கன்னி.!
தற்போது , டீகே இயக்கத்தில் இந்த வாரம் வெளியான ‘காட்டேரி’ படத்தில் ஆத்மிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், நீண்ட தாமதத்திற்குப் பிறகு படம் இன்று வெளியாகியுள்ளது.