சினிமாத்துறையில் பொதுவாக ஒரு இயக்குனர்கள் தான் இயக்கும் படங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்களோ அதே அளவிற்கு தங்களுடைய நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, பிடித்த இடங்களுக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது என மனதை சந்தோசமாக வைத்திருப்பர்.
ஆனால், சில சினிமா பிரபலங்கள் இதில் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு. அப்படி தான் ஒரு இளம் இயக்குனர் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். பதினாறு என முடியும் அவரின் முதல் திரைப்படமே கவனிக்க வைத்தது. இதோ வந்துட்டார் இன்னோர் மணிரத்னம் என அவரை பலரும் பேசினார்கள்.
அடுத்து சுவாமி நடிகரை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தற்போது வரை வெளிவரவில்லை. அதன்பின், முன்னணி நடிகரின் பெயரை தனது பெயரில் வைத்திருக்கும் வாரிசு நடிகரை வைத்து அவர் இயக்கிய கேங்ஸ்டர் திரைப்படம் சூப்பர் பிளாப் ஆனது. அதன்பின் ஒல்லிக்குச்சி நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கினார். உண்மையில், அவர் இயக்கவில்லை, அந்த நடிகரே இயக்கினார் என செய்திகள் வெளியானது. அந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது.
இதையும் படியுங்களேன்- இந்தியன் 2வின் தெறிக்கும் புத்தம் புது அப்டேட்.! தமிழ் சினிமாவை மிரட்ட மீண்டும் வருகிறார் வில்லாதி வில்லன்.!
அந்த இயக்குனர் பேரூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கி இருந்ததாகவும், பெரிதாக படங்களை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதாலும், தனது இயக்கிய படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதாலும், தனது நண்பர்களுடன் இணைந்து குடித்துவிட்டு அந்த அபார்ட்மெண்ட்டில் கூத்தடித்தாராம். இரவு பகல் என அணைத்து நேரமும் குடித்துவிட்டு ஒரே அட்ராசிட்டி தானம்.
இதனால் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அக்கம் பக்கம் வசித்தவர்கள் ஓனரிடம் புகார் அளித்தார்களாம். இதனால் கடுப்பான அபார்ட்மெண்ட் ஓனர் நீங்கள் காலி செய்யுங்கள் இல்லையென்றால் போலீசில் புகார் அளித்துவிடுவோம் என்று கூறினார்களாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம் அந்த இளம் இயக்குனர்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…