சூர்யாவை பார்த்து ஒற்றை கேள்வி கேட்ட வில்லன் நடிகர்... சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய அந்த கேள்வி என்ன?

by Rohini |
raghu_main
X

சினிமாவில் ஒரு நடிகர் தனக்கான அங்கீகாரம் மற்றும் நிலையான இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் போராட வேண்டும். அடுத்தடுத்து நல்ல கதைகள் மற்றும் சிறந்த கேரக்டர்கள் மூலம் வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே அந்த ஹீரோ தனக்கான ரசிகர்களை உருவாக்கி ஒரு நிரந்தரமான இடத்தை பெற முடியும்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. பல விருதுகளையும் வென்று சூர்யாவிற்கு பெரிய அளவிலான பாராட்டை பெற்று தந்தது.

suriya1

தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படி நடிப்பு தயாரிப்பு என கலக்கி வரும் சூர்யாவின் ஆரம்பகால திரை வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

அதன்படி தொடக்க காலத்தில் சூர்யா நடித்த பொழுது அவரின் நடிப்பு மற்றும் நடனம் அவ்வளவாக சரி இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவரின் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த சமயத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த நடிகர் ரகுவரன் அவருக்கு அட்வைஸ் கூறுவாராம்.

suriya2

அந்த வகையில் ஒருமுறை நடிகர் ரகுவரன் சூர்யாவைப் பார்த்து, "உனக்கு நன்றாக இரவில் உறக்கம் வருகிறதா? என கேட்டிருக்கிறார். மேலும் நம்மை பற்றி இழிவாக பேசுபவர்களின் வாயை நம் வெற்றியின் மூலம் அடைக்க வேண்டும். விமர்சித்து பேசுபவர்களுக்கு உனது வெற்றி ஒரு பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உனக்கு இரவில் நன்றாக உறக்கம் வரும்" என கூறியிருக்கிறார்.

suriya3

ரகுவரன் கூறியதையடுத்து சூர்யா கடுமையான விடாமுயற்சியோடு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்தே பிதாமகன், காக்க காக்க, ஆறு, வேல், வாரணம் ஆயிரம் என அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து விமர்சித்தவர்கள் வாயை அடைத்தாராம்.

Next Story