விஷாலின் நாயை கண்டு பயந்து நடுங்கும் தியேட்டர் அதிபர்கள்.!

by Manikandan |
விஷாலின் நாயை கண்டு பயந்து நடுங்கும் தியேட்டர் அதிபர்கள்.!
X

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் "வீரமே வாகை சூடும்" இந்த திரைப்படம் நாளை தியேட்டரில் கோலாகலமாக வெளியாக உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்ந்து பின்னர் தற்போது அதிக எண்ணிக்கையில் பெரிதாக வெளியாக உள்ள முதல் தமிழ் திரைப்படம் இந்த திரைப்படம் ஆகும்.

vishal

இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகி உள்ளது. இந்தப் படத்தின் விநியோக உரிமை மற்ற பட வேலைகள் சம்பந்தமாக வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் என =அலுவலகத்திற்கு பலர் வந்து போகிறார்கள்.

vishal

ஆனால், அவர்கள் தற்போது விஷால் அலுவலகத்திற்கு வர தயங்குகிறார்களாம். காரணம் விஷால் தற்போது புதிதாக இரண்டு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய் மிகவும் பெரியதாக சிறிய மாடு போல உள்ளதால் அதனை கட்டி வைப்பது இல்லையாம் அவிழ்த்து விடுகிறாராம் அலுவலகத்திற்கு வரும் மற்ற நபர்கள் இதனை கண்டு பயந்து நடுங்குகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- என்ன செய்யுறதுனே தெரியலையே.?! தலையில் அடித்துக்கொள்ளும் தமிழ் பட நிறுவனம்.!

ஆனால், நடிகர் விஷால் அது ஒன்றும் செய்யாது நீங்கள் தைரியமாக வரலாம் என்று அவரை அவர்களுக்கு தைரியம் தைரியம் கொடுத்து உள்ளே அழைக்கிறாராம். இருந்தாலும் ஏதேனும், அசம்பாவிதம் நடந்தால் என்னவாகப் போகிறதோ தெரியவில்லை. இவரின் நாய் பாசம் வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களையும் அங்கு வந்து போகும் மனிதர்களையும் பயப்பட வைத்துள்ளது தான் மிச்சம்.

Next Story