More
Categories: Cinema News latest news

ரீரிலிஸ் பரிதாபங்கள்!.. சினிமா தியேட்டர இப்படி K Tv மாதிரி ஆக்கி விட்டுடீங்களேயா!.. ரசிகர்கள் கலாய்!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல பெரிய படங்கள் சம்மருக்கு வெளியாகி சம்பவம் செய்யும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு பயந்து புதிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன.

இந்தியன் 2, விடாமுயற்சி, கங்குவா, வேட்டையன், கோட் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் எல்லாமே இந்த ஆண்டு சம்மருக்கு வரும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரசிகர்களை கவர்ந்த நவராத்திரி… சிவாஜி 9 வேடங்களில் நடிக்க காரணமே இதுதான்!..

ஆனால், இப்போ அந்த படங்கள் எல்லாம் ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்கின்றனர். இந்தியன் 2 படம் மட்டும் தேர்தல் முடிந்ததும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய படங்களை பார்க்கவும் தியேட்டருக்கு ரசிகர்கள் வராத நிலையில் பழைய பட்ங்களை ரீ ரிலீஸ் செய்தாவது கல்லா கட்டலாம் என தியேட்டர் உரிமையாளர்கள் நினைத்து வருகின்றனர். டிக்கெட் விலையை குறைத்தும் பல வேலைகளை பார்த்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் சந்தித்த பிரச்சினையை விஜயும் சந்திப்பாரா? ‘கோட்’ படத்தில் இருக்கும் இடியாப்ப பிரச்சினை

ரஜினிகாந்தின் அண்ணாமலை, அஜித்தின் வாலி, விஜய்யின் திருமலை மற்றும் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் தற்போது ரி ரிலீஸ் ஆகி உள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல காதல் படங்கள் வெளியாகின.

இந்நிலையில், புதிதாக இந்த படங்கள் வெளியாகி உள்ள நிலையில், என்னடா தியேட்டரை எல்லாம் கே டிவி போல மாத்தி விட்டுருக்கீங்க என கலாய்த்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் இறுதி வரை தியேட்டர்களின் நிலை கவலைக்கிடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Saranya M

Recent Posts