More
Categories: Cinema News latest news

தேர இழுத்து தெருவுல விட்ட கதையா இருக்கு!… புது பஞ்சாயத்துக்கு ரெடியாகும் லலித்…

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பு இப்படம் ரிலீஸான பின் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:சண்டையா? அஜித்துக்கும் தனக்கும் இருக்கிற bonding பற்றி வாய்திறந்த பிரசாந்த் – இவங்கள போய் இப்படி நினைச்சிட்டோமே

இப்படம் பல தெலுங்கு படங்களின் சாயலில் இருப்பதாகவும் மேலும் இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதைகள் இல்லை எனவும் படத்தை பார்த்தவர்களும் நெட்டிசன்களும் கருத்தினை தெரிவித்திருந்தனர். இப்படம் உருவாகும்போது பாதியிலேயே விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே சண்டை வந்துவிட்டது எனவும் அதனால் படத்தின் மீதி பாதியை ரத்தினம்தான் இயக்கினார் எனவும் பலவித கருத்துகள் உலாவின.

மேலும் வெளியான சில நாட்களிலேயே இப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் காற்று வாங்குவதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படம் அந்த அளவு சிறப்பான வசூலை தங்களுக்கு பெற்றுதரவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

இதையும் வாசிங்க:நான் தூக்கி குளிப்பாட்டிய குழந்தை விஜய்! இப்போ பாக்க முடியாம கஷ்டப்படுறேன் – கண்கலங்கி பேசிய அந்த பிரபலம்

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் திரையரங்கினால் வரும் லாபத்தில் 80சதவீதத்தினை தனக்கு கொடுக்கும்படியும் மீதியுள்ள 20 சதவீதத்தையே திரையரங்க உரிமையாளார்களுக்கு கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கடுப்பான திரையரங்க உரிமையாளர்கள் தற்போது ஒரு பொதுக்குழு கூட்டி இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே லியோ படத்தினால் தங்களது திரையரங்கம் பல நஷ்டத்தைதான் சம்பாதித்துள்ளது எனவும் அதிலும் 80 சதவீதத்தை லலித் கேட்பது எங்களால் ஏற்று கொள்ள முடியாது எனவும் தங்களது கருத்தினை பதிவு செய்யவிருக்கின்றனர். மேலும் இது மாதிரியான சம்பவங்கள் வருங்காலத்திலும் நடக்க கூடாது என்பதை மனதில் வைத்தும் இந்த கூட்டத்தில் பேச உள்ளனராம். ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்த லலித்குமார் இப்போது இந்த புது பிரச்சினையை சமாளிக்க வேண்டியுள்ளது.

இதையும் வாசிங்க:அடுத்த ஆடு சிக்கிடுச்சு!.. லிப் லாக் முத்தத்துடன் புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்!..

Published by
amutha raja

Recent Posts