Connect with us
mella

Cinema History

‘மெல்ல திறந்தது கதவு’ படத்தை ஓட வைத்த தியேட்டர் ஊழியர்கள் – உலக சினிமாவுல இப்படி நடந்தது இல்ல!..

முன்பெல்லாம் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தியேட்டரில் படத்தை போடும் ஊழியரிடம்தான் பேசுவார்கள். ஏனெனில், எந்த இடத்தில் படம் தொய்வாக இருக்கிறது? ரசிகர்கள் எந்த இடத்தில், எந்த காட்சியில் விசில் அடித்து ரசிக்கிறார்கள்? எந்த காட்சி பிடிக்காமல் ரசிகர்கள் கத்துகிறார்கள்? என எல்லாமே அவர்களுக்குத்தான் தெரியும். இன்னும் சொல்லப்போனால் உண்மையான எடிட்டரே அவர்கள்தான். தொய்வான காட்சிகளை மறைத்துவிட்டு படத்தை விறுவிறுப்பாக ஓட்டி விடுவார்கள். பல இயக்குனர்களுக்கே ஆச்சர்யத்தை கொடுத்த காலம் அது.

mella

80,90களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரின் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா உள்ளிட்ட பலரும் நடித்து 1986ம் வருடம் வெளிவந்த திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இப்படத்திற்கு இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இசையமைத்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.

mella

அந்த படத்தில் இசையின் மீது ஆர்வமுள்ள நபராக மோகன் இருப்பார். அவரின் சொந்த கிராமத்திற்கு செல்வார். அவரின் மாமன் மகள் ராதாவுக்கு அவர் மீது காதல். ஆனால், அந்த காதலை மோகன் ஏற்கமாட்டார். அதன் காரணமாக ராதாவின் தந்தை இறந்துவிடுவார். எனவே, ராதாவை அழைத்துக்கொண்டு மோகன் சென்னைக்கு வருவார்.

radha

 

அப்போதுதான் மோகனின் அப்பா மோகன் அமலாவை காதலித்த பிளாஸ்பேக்கை சொல்வார். அமலாவின் முகத்தை கடைசிவரை பார்க்கமாலயே அவர் ஒரு புதைகுழியில் மூழ்கி இறந்துவிடுவார். அதேபோல், ராதாவும் தற்கொலை செய்து கொள்ள போக அதே புதைகுழியில் மாட்டிக்கொள்வார். ஆனால், மோகன் அவரை காப்பாற்றிவிடுவார். இதுதான் கதை.

mella

இந்த படம் தியேட்டரில் வெளியானபோது அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இரண்டாம் பாதியை முதலிலும், முதல் பாதியை இடைவேளைக்கு பின்னரும் மாற்றி ஒளிபரப்பினார்கள். அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இதை கேள்விப்பட்டு தமிழகத்தில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் அப்படியே செய்ய அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

உலக சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top