2வது நாளே தியேட்டர் காலி!.. பரிதாப நிலையில் பராசக்தி!.. ஐயோ பாவம்!…

Published On: January 12, 2026
parasakthi
---Advertisement---

இறுதிச்சுற்று., சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்.

1960களில் தமிழகத்தில் எல்லோரும் கட்டாய ஹிந்தி படிக்கவேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து பல கல்லூரி மாணவர்களும் இயக்கங்களும் போராடினர்கள். அப்போது பலரும் தங்களின் உயிர்களையும் இழந்தார்கள். அந்த போராட்டத்தில் திமுகவும் கலந்து கொண்டது.. இதை அடிப்படையாக வைத்து பராசக்தி படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதியிருந்தார் சுதாகர்.

ஆனால் படம் வெளியான பின் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.. முதல் 10 நிமிடம்.. இடைவேளை வரும் பத்து நிமிடம்.. கிளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது.. மற்றபடி படம் போர்.. படத்தின் இரண்டாம் பாதி மிகவும் மோசம்… படம் மிகவும் நீளம்.. என பலரும் சொன்னார்கள்.. ஆனால் 60, 70களில் பிறந்தவர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள்.. இப்போதுள்ள இளைஞர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள பராசக்தி படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

பராசக்தி திரைப்படம் ரசிகர்களை முழுதாக கவராமல் போனதால் படம் வெளியான இரண்டாம் நாளிலேயே அதாவது நேற்று பல தமிழகத்தில் பல ஊர்களிலும் பல தியேட்டர்கள் காத்து வாங்கியது.. பல தியேட்டர்களில் ரசிகர்கள் வராமல் காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள்.. பராசக்தி திரைப்படம் முதல் நாள் 11.50 கோடி மட்டுமே வசூல் செய்ததாக செய்தி வெளியான நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் 27 கோடி என செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.