சூரியை காலி செய்த மாரி!.. வாழை அடித்த அடியில் காணாமல் போன கொட்டுக்காளி..

#image_title
Vaazhai: மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான வாழை மற்றும் சூரியின் நடிப்பில் உருவான கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்கள் கடந்த 23ம் தேதி வெளியானது. கொட்டுக்காளி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். ஏற்கனவே கூழாங்கல் என்கிற படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருந்தார்.
கொட்டுக்காளி படத்திற்கு அதிக புரமோஷனும் செய்யப்பட்டது. இதற்கு முன்பு விடுதலை மற்றும் கருடன் என இரண்டு ஹிட் படங்களை சூரி கொடுத்திருந்ததால் கொட்டுக்காளி படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம் ஒரு நீண்ட குறும்படம் போல இருந்ததாக பலரும் சொன்னார்கள்.

kottukkali
படத்தில் கதையென பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சின்ன பயணத்தை ஒரு படமாக காட்டியிருந்தார் வினோத்ராஜ். அதோடு, இந்த படத்திற்கு பின்னணி இசையும் இல்லை. படம் பார்த்த பலரும் படம் போரடிக்கிறது. பொறுமையை சோதிக்கிறது என சொன்னார்கள். விமர்சகர்கள் மற்றும் சினிமா செய்தியாளர்களும் கொட்டுக்காளி படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையே சொன்னார்கள்.
ஆனால், மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. மாரி செல்வராஜ் சிறுவனாக இருந்தபோது அவரின் சொந்த ஊரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார். இதனால், இந்த படம் உண்மைக்கு நெருக்கமாக இருந்தது. ஒரு வாழ்வியல் இருந்தது.

vaazhai
அதோடு, இப்படத்தின் இறுதிக்காட்சி படம் பார்த்த ரசிகர்களை அழவைத்தது. படம் பார்த்த பலரும் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை என சொன்னார்கள். வாழை படத்தை பார்த்த மணிரத்னம், பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் படத்தை பாராட்டி பேசியிருந்தார்கள்.
எனவே, இப்படம் ஒரு வெற்றிப்படமாக மாறி தியேட்டரில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, கொட்டுக்காளி படம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டு வருகிறது. மேலும், வாழை படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புளூசட்ட மாறன் இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து மீம்ஸ் மூலம் நக்கலடித்திருக்கிறார்.

#image_title