தங்கலான்லாம் ஓரமா போ!. அடிச்சி தூக்கும் டிமாண்டி காலணி 2... அருள்நிதி செம ஹேப்பி!...
Demonte colony 2 : அரசியல் தொடர்பு கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அருள்நிதி. நடிக்கவேண்டும் என்கிற ஆசை ஏற்படவே பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் அறிமுகமானார். முதல் படமே நல்ல கதையாக அமைந்துவிட அருள்நிதி சிறப்பாகவே நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதில் சில கதைகள் மதுரை மாவட்ட மக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் மிஸ்ட்ரி திரில்லர், இன்வெஷ்டிகேசன் திரில்லர் போன்ற வகை திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அது அவருக்கு கை கொடுத்தது.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
டி பிளாக், டைரி, தேஜாவு, கே 13 என அவரின் படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. ‘தமிழ் சினிமாவில் குறைத்து மதிப்பிடப்படும் ஒரு நடிகர் அருள்நிதி. அவர் தேர்வு செய்யும் கதைகள் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது’ என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிடுவதுண்டு.
அப்படி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து 2015ம் வருடம் வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலணி. ஹாரர் திரில்லராக வெளிவந்த இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து ஹிட் அடித்தது. அதன்பின் அதன் இரண்டாம் பாகமாக டிமாண்டி காலணி 2 சமீபத்தில் வெளியானது.
விக்ரமின் தங்கலான் படத்தோடு டிமாண்டி காலணி 2 படம் வெளிவந்தது. முதலில் தங்கலான் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஒருபக்கம், டிமாண்டி காலணி 2 படமும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தது. இந்த படத்தில் அருள்நிதியோடு பிரியா பவானி சங்கரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் வாரம் 275 தியேட்டர்களில் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டது. இப்போது ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பால் 2வது வாரத்தில் 75 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 350 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த் தகவலை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: பொண்டாட்டி புள்ள வரல!.. ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து!.. விஜய்க்கு அரசியல் தேவையா?!.. விளாசும் பிரபலம்..