ஆரம்பமே ஆப்பா?!.. கோட் ஸ்பெஷல் ஷோவை கேன்சல் செய்த தியேட்டர் ஓனர்ஸ்!..
Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கோட் படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகிறது.
எனவே, எல்லா மாநிலங்களிலும் முன்பதிவு துவங்கிவிட்டது. இணையதளத்திலும், தியேட்டரிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பல விஜய் ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் ஏமாந்து போயுள்ளனர். ஏனெனில், முன் பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வெள்ளி, சனி, ஞாயிறுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து போனது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படக்குழு ரகசியம் இதானா? ஆனா நீங்களாம் கொஞ்சம் வெவரம்தான்…
பொதுவாக விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் 3 நாட்களிலேயே வசூலை அள்ளிவிட வேண்டும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நினைப்பார்கள். அப்படி அள்ளினால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். இதற்காக முதல்நாள் தியேட்டர் கவுண்ட்டரிலேயே அதிக விலைக்கு விற்பார்கள்.
இதில், அரசு தரப்பு கெடுபிடி செய்வதால் டிக்கெட் விலையோடு திண்பண்டங்களையும் சேர்த்து வாங்கினால் மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் செய்ய முடியும் என கொண்டு வந்துவிட்டார்கள். இதனால், டிக்கெட் விலை 390 ஆக இருக்கிறது. அதோடு, முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
அப்போது டிக்கெட்டின் விலை சில ஆயிரங்களில் விற்கப்படும். அதேபோல், தியேட்டரில் அதிகாலை 4 மணி அல்லது காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி ஒன்றை திரையிடுவார்கள். கோட் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதால் சிறப்பு காட்சியின் ஒரு டிக்கெட் விலையை 700 முதல் 800 வரை விற்பனை செய்யுங்கள் என தியேட்டர் அதிபர்களிடம் வினியோகஸ்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர் அதிபர்கள் இதை ஏற்கவில்லை. அதோடு, எங்களுக்கு சிறப்பு காட்சி வேண்டாம் எனவும் சொல்லிவிட்டார்கள். இதனால் பல தியேட்டர்கள் சிறப்பு காட்சி வெளியாகாது என சொல்லப்படுகிறது. ஆனாலும் ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நான் விஜயின் தீவிர ரசிகன்! ‘கோட்’ படத்தில் நடிக்க vpயிடம் சண்டை போட்ட பிரபலம்