தீயரி எசமாரிக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?? உண்மையை உடைக்கும் பொன்னி நதி பாடலாசிரியர்…
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் 60 வருட கனவுத் திரைப்படம் என்ற வகையில் பலரும் இத்திரைப்படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இத்திரைப்படம் தற்போது மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் ஆனது. இதன் மூலம் “பொன்னியின் செல்வன்”, கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூல் ரெக்கார்டை உடைத்துள்ளது.
மேலும் இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடிகளை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது. இணையத்தில் எங்கு திரும்பினாலும் இப்பாடலே ஒலித்து வருகிறது. இப்பாடலின் நடுவே வரும் “தீயரி எசமாரி” என்ற வரி தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இணையத்தில் இந்த வரிக்கு அர்த்தமும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் “தீயரி எசமாரி” என்ற வரிக்கான அர்த்தத்தை குறித்து பேசியுள்ளார். அதில் “தீயரி எசமாரி என்ற வரிகளுக்கு குறிப்பிட்ட எந்த அர்த்தமும் கிடையாது. அது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கியது. அப்பாடல் முழுக்க முழுக்க தெம்மாங்கு பாணியிலான பாடல். வழக்கம்போல் தெம்மாங்கு பாடலில் இடம்பெறும் ஏலே ஏலே ஏலேலோ மாதிரியான சொல்தான் அந்த வரி. அதற்கு எந்த பொருளும் கிடையாது” என நெட்டிசன்களின் சந்தேகத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.