வீட்டில் திருடுபோன 100 சவரன் நகைகள்..ஆனால் வெளியானது வேறு!..சாவித்திரியின் பெருந்தன்மை பாருங்க!..

by Arun Prasad |   ( Updated:2022-10-14 04:53:41  )
Savitri
X

Savitri

நடிகை சாவித்திரி ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நடிகையாக திகழ்ந்தவர். இவர் தனது வாழ்வில் பல ஏமாற்றங்களை கண்டுள்ளார். ஆனாலும் எந்த நிலையிலும் உதவும் மனப்பான்மை கொண்டவர் என அவரை பற்றி பலரும் கூறுவதுண்டு. இவ்வளவு பெருந்தன்மை கொண்ட சாவித்திரி, அவரது வீட்டில் திருட்டு நடந்தபோதிலும் அந்த பெருந்தன்மையை அவர் கைவிடவில்லை.

Savitri

Savitri

ஒரு முறை அவரது வீட்டில் கிட்டத்தட்ட 100 சவரன் நகைகள் காணாமல் போனது. அந்த நகை காணாமல் போனதில் இருந்து அவரது வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண்மணியும் காணவில்லை.

அந்த நகைகளை அந்த வேலைக்காரப் பெண்மணிதான் திருடிவிட்டுச் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது. சாவித்திரியின் தோழிகளும் உறவினர்களும் அந்த பெண்மணி மேல் போலீஸில் புகார் அளிக்கவேண்டும் என கூறினர். ஆனால் சாவித்திரியோ புகார் அளிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

Savitri

Savitri

“என்னுடைய வீட்டில் பல வருடங்கள் வேலை செய்தவர் அந்த பெண்மணி. போலீஸில் புகார் அளித்து, அவர்கள் இழுத்து வந்து அடித்து துன்புறுத்தி உண்மையை வரவழைப்பார்கள். ஆனால் அதனை பார்ப்பதற்கு என் மனம் தாங்காது.

என்னுடைய நகைகளை எத்தனையோ பேர் இது போல் எடுத்து சென்றிருக்கிறார்கள். இது 100 சவரன்தானே. போனால் போகிறது” என கூறினாராம். இப்படி ஒரு பெருந்தன்மை வாய்ந்த நடிகையை கேள்விப்படும்போது மனதுக்குள் நெகிழ்ச்சி பொங்குகிறது.

Next Story