வேணாம்பா சொன்னா கேளேன்!... தேங்காய் சீனிவாசனை தடுத்த எம்.ஜி.ஆர்..அடுத்து நடந்தது என்ன?

by Akhilan |   ( Updated:2022-10-22 08:48:23  )
தேங்காய் சீனிவாசன்
X

தேங்காய் சீனிவாசன்

நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கும், எம்.ஜி.ஆர் இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகிறது.

ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தேங்காய் சீனிவாசன். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள சீனிவாசன் 70களில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே மேடை நாடகங்கள் நடிக்கும் பழக்கம் உடையவர். கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அந்த நாடகத்தினை பார்க்க வந்த டணால் தங்கவேலு இவரை தேங்காய் சீனிவாசன் என அழைத்தார். அதுவே இன்று வரை தங்கி விட்டது.

தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன்

நடிப்பில் கொடிக்கட்டி பறந்த சமயத்தில் இவருக்கு ஒரு விபரீதமான ஆசை வந்தது. ஒரு படத்தினை தயாரித்து பார்க்கலாமே என்பது தான் அது. இதை எம்.ஜி.ஆரிடம் கூறினாராம். அவரோ வேணாப்பா இதெல்லாம் எனத் தடுத்திருக்கிறார். இருந்தும் அவர் பேச்சினை கேட்காமல் கிருஷ்ணன் வந்தான் என்ற படத்தினை தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தனர். இளையராஜா படத்திற்கு இசையமைத்தார்.

படப்பிடிப்புகள் எல்லாம் சென்றுக்கொண்டிருந்த சூழலில், தேங்காய் சீனிவாசனால் படத்தினை முடிக்க முடியாத நிலை உருவாகியது. பலரிடத்தில் கடன் கேட்டும் கிடைக்காமல் எம்.ஜி.ஆரினை தேடிச் சென்றார். அவரிடம் தன் பிரச்சனையை கூற, எம்.ஜி.ஆர்ரோ இதற்கு தான் நான் அப்போதே சொன்னேன். கேட்டியா எனக் கூறிவிட்டார். இவரிடமும் பணம் கிடைக்காது என்ற சோகத்தில் வீடு திரும்பினார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

ஆனால் அவருக்கு தேவையான பணத்தினை தனது உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். இத்தனை சோதனைகளை சந்தித்து வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. சீனிவாசன் மிகப்பெரிய கடனில் முழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story