தமிழ் சினிமாவில் எப்பேற்பட்ட ஆளுமையாக எம்ஜிஆர் இருந்தார் என அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆரை தங்கள் தெய்வமாகவே மக்கள் போற்றி வந்தனர். எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் தன் குருவாகவும் நினைத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரின் குணம் அப்படியே எம்ஜிஆருக்கும் இருந்தது. ஒரு பெரிய கொடை வள்ளலாகவே எம்ஜிஆர் வாழ்ந்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அவருடைய புகழையும் பெருமையையும் இன்றுவரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு உயர்ந்த எண்ணம் படைத்தவராக எம்ஜிஆர் இருந்திருக்கிறார். எம்ஜிஆர் காலத்தில் நாம் வாழாமல் போயிட்டோமே என்றும் சிலர் வருத்தப்படுவதுண்டு.
அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளலாக இருந்த எம்ஜிஆரை மக்கள் மிகவும் எளிதாக தங்கள் தலைவராகவும் ஏற்றுக் கொண்டனர். நல்ல செயல்கள், நல்ல எண்ணங்கள் இப்படி இருந்ததனாலேயே அரசியலிலும் எம்ஜிஆரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
அவரை பின்பற்றி வந்தவர்கள் ஏராளம். ஆனாலும் எம்ஜிஆரை போல இன்னொரு தலைவரை நாம் பார்த்திர முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் எம்ஜிஆர் மீது யார் தான் அன்பில்லாமல் இருப்பார். அந்த வகையில் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். எல்லா மேடைகளிலும் எம்ஜிஆருக்காக என்னவேண்டுமென்றாலும் செய்வேன் என தேங்காய் சீனிவாசன் அடிக்கடி கூறுவதுமுண்டு.
ஒரு சமயம் தேங்காய் சீனிவாசன் சிவாஜியை வைத்து ‘கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தயாரித்தார். ஆனால் போதிய பணம் இல்லாததால் எம்ஜிஆரிடம் கேட்கலாம் என முடிவெடுத்த தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆரை தேடி போனார். விவரத்தை கேட்டறிந்த எம்ஜிஆர் தேங்காய் சீனிவாசனை கடிந்து கொண்டாராம்.
சொந்தப் படம் எடுத்து நஷ்டப்படாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? அதையும் மீறி செய்திருக்கிறாய் என திருப்பி அனுப்பிவிட்டாராம் எம்ஜிஆர். வீட்டுக்கு திரும்பிய தேங்காய் சீனிவாசனுக்கு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருந்தது. எம்ஜிஆர் கொடுத்தனுப்பியதாக ஒருவர் 25 லட்சம் ரூபாயை தேங்காய் சீனிவாசனிடம் கொடுத்துவிட்டு சென்றாராம். அப்படியே ஷாக் ஆகி நின்றுவிட்டாராம் தேங்காய் சீனிவாசன்.
இதையும் படிங்க : இப்படி எழுதினா நான் பாட மாட்டேன்!.. கண்ணதாசனிடம் மல்லுக்கட்டிய டி.எம்.எஸ்..
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…