Cinema News
சண்டையா? அஜித்துக்கும் தனக்கும் இருக்கிற bonding பற்றி வாய்திறந்த பிரசாந்த் – இவங்கள போய் இப்படி நினைச்சிட்டோமே
Prasanth – Ajith : தமிழ் சினிமாவில் விஜய் , அஜித் என இருவரும் அடைந்த வளர்ச்சியை 90களில் ஒரு தனிமனித ஆளாக இருந்து அடைந்தவர் நடிகர் பிரசாந்த். மூன்று பேரும் சம கால நடிகர்களாக இருந்தாலும் விஜய், அஜித்தை விட அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்துடன் கோலிவுட்டையே கலக்கியவராக பிரசாந்த் இருந்தார்.
தமிழ் நாடு மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். நடிகர்களில் அதிகளவு வெளி நாட்டில் போய் கச்சேரி செய்தவர் பிரசாந்தாகத்தான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை பிரசாந்தின் பிரதான கோட்டையாக கூறலாம்.
இதையும் படிங்க: திருட்டு கதையில் நடித்து திணறிய பிரபுதேவா..! கடைசியில் சூப்பர்ஸ்டார் உதவியால் எஸ்கேப் ஆன சம்பவம்..!
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பிரசாந்தின் மார்கெட் சரியத்தொடங்கியது. விஜய் , அஜித் இருவரும் விறுவிறுவென வளர்ந்து தன்னுடைய மார்கெட்டை பலப்படுத்திக் கொண்டனர். சொல்லப்போனால் திருமணம் , விவாகரத்துக்கு பிறகு பிரசாந்தின் கெரியரில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜய் நடிக்கும் தளபதி68 படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமில்லாமல் தளபதி68 படத்தின் பூஜையும் சமீபத்தில்தான் நடந்தது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தப்பு செய்யாமையா அமைதியா இருக்காரு… மறுப்பு சொல்லணும்ல… இமானை மிரட்டலாமா?
இந்த நிலையில் தளபதி 68 படத்தைப் பற்றியும் அஜித்தை பற்றியும் பிரசாந்த் சுவாரஸ்யமான சம்பவங்களை கூறினார். அஜித்துக்கும் பிரசாந்துக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு இருந்ததாகவும் ஒரு விழாவில் அஜித் பின்னாடி நிற்க பிரசாந்திற்கு மட்டும் மாலை அணிவித்து வரவேற்ற மாதிரி ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது.
அதை பார்த்த ரசிகர்கள் அஜித்தை பிரசாந்த் அவமானப்படுத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே அவர்களுக்குள் ஒரு இணக்கமான உறவு இருப்பதாகவே பிரசாந்த் கூறினார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தப்பு செய்யாமையா அமைதியா இருக்காரு… மறுப்பு சொல்லணும்ல… இமானை மிரட்டலாமா?
அஜித்தும் பிரசாந்தும் இணைந்து கல்லூரி வாசல் என்ற படத்தில் ஒன்றாக நடித்தார்கள். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அவ்வப்போது இருவரும் சேர்ந்து ஷர்டில் விளையாடுவார்களாம். குடும்பத்தில் உள்ள உறுப்பினர் மாதிரி தான் அஜித்திடம் பழகினேன் என்று பிரசாந்த் கூறினார்.