Suriya: 16 வருஷமானாலும் இன்னும் அதே ஃபிரஷ்னஸ்.. ‘அயன்’ படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

by Rohini |   ( Updated:2025-04-03 03:08:41  )
ayan1
X

ayan1

Suriya: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்திருக்கிறார். அவருடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் நல்ல நல்ல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா. இன்னொரு பக்கம் மற்ற மொழிகளிலும் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். பல தெலுங்கு இயக்குனர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் சூர்யா.

தற்போது சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கல்ட் கிளாசிக் படமாக தயாராகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களுக்கு பிறகு சூர்யா தெலுங்கு இயக்குனருடன் பணியாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் அயன். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த நாளை கொண்டாடும் விதமாக சூர்யா ரசிகர்கள் அயன் படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அயன் படத்தை பொறுத்தவரைக்கும் சினிமாவில் பெரிய கமெர்ஷியல் ஹிட்டான திரைப்படம். 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷனை அள்ளிய திரைப்படமாகவும் மாறியது. அதுமட்டுமில்லாமல் 200 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமும் கூட. தெலுங்கு மறும் கேரளாவில் 100 நாள்களை தாண்டி ஓடி அங்கும் சாதனை படைத்த படம் தான் அயன்.

அந்த நேரத்தில் ரஜினி மற்றும் கமல் படங்கள்தான் 100 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களாக இருந்தன. அதன் பிறகு சூர்யாவின் அயன் திரைப்படம்தான் அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாக மாறியிருந்தது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ஐந்தாவது அதிக கலெக்‌ஷனை அள்ளிய தமிழ் டப் படமாக அயன் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யா மிகவும் சூப்பர் கூலாக நடித்திருப்பார்.

ayan

கேவி ஆனந்தின் ஸ்க்ரீன் ப்ளே இன்னும் பார்க்க பார்க்க ஒரு ஃபிரஷான உணர்வையே ஏற்படுத்தும். இவையெல்லாம் தாண்டி ஹரீஸ் ஜெயராஜின் மியூஸிக் படத்தை எங்கேயோ கொண்டு போய்விட்டது. படத்தில் அமைந்த ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிகளும் பிரம்மாதம்.ஒரு மெகா ப்ளாக்பஸ்டர் படமாக சூர்யாவின் கெரியரில் அயன் திரைப்படம் தான் அமைந்தது. மீண்டும் அப்படி ஒரு படத்தை சூர்யாவுக்கு கொடுக்க வேண்டுமென்றால் கேவி ஆனந்த்தான் பிறந்து வரணும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Next Story