ஈகோவால் வெடித்த பிரச்சினை.. ஒரு செல்ஃபி வந்து மூக்குத்தி அம்மனுக்கு வில்லனா போச்சே

by Rohini |   ( Updated:2025-03-27 05:21:15  )
naayan
X

naayan

சமீப காலமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சுந்தர் சி யின் உதவியாளர் ஒருவரை நயன்தாரா திட்டி விட்டதாகவும் அதற்கு சுந்தர் சி தன்னுடைய அசிஸ்டன்டை திட்டியதற்கு நயன்தாரா மீது கோபப்பட்டதாகவும் இப்படி பல வதந்திகள் கிளம்பி கொண்டு இருக்கின்றன.

இதற்கு மத்தியில் குஷ்பூ திடீரென ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். வெளியில் மூக்குத்தியம்மன் 2 படத்தை பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போல குஷ்பூ தன்னுடைய பதிவில் பதிவிட்டு இது ஒரு கண் திருஷ்டி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும்பொழுது யாரும் யார் மீதும் எந்த ஒரு அவதூறு செய்தியையும் பரப்பவில்லை.

இது ஒரு ஈகோவால் எழுந்த பிரச்சனை என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்த படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது ரெஜினா அனைவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்திருந்தார். அந்த ஒரு செல்பியால் எழுந்த பிரச்சினை தான் இது என்று செய்யாறு பாலு கூறினார். ரெஜினா செல்பி எடுத்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் ரெஜினா மீது நயன்தாரா கடிந்து கொண்டார் என்று செய்யாறு பாலு கூறினார்,

ஏனெனில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவை விட ரெஜினாவிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அந்த ஒரு ஈகோ கூட நயன்தாரா கோபப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. யாரை கேட்டு அந்த செல்பியை எடுத்தார் என்ற வகையில் நயன்தாரா கோபப்பட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டு வருகின்றது. பொதுவாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலே ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வரத்தான் செய்யும்.

அப்படி இருக்கும் பொழுது இதில் ரெஜினா ,மீனா ,நயன்தாரா என டாப் நடிகைகள் இருக்கும் பட்சத்தில் தன்னுடைய முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு ஈகோ கூட நயன்தாராவுக்கு இருக்கலாம் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Next Story