Connect with us

Cinema History

பாட்டில் தப்பு இருக்கே… விடாப்பிடியாக சொன்ன எம்.ஜி.ஆர்… வாலி என்ன செய்தார் தெரியுமா?

MGR: தன்னுடைய படங்கள் தப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புபவர் தான் எம்.ஜி.ஆர். அதுப்போல தன் தமிழ் மீது ரொம்பவே  நம்பிக்கை வைத்து இருந்தவர் வாலி. இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டால் என்ன நடந்து இருக்கும் என்ற சுவாரஸ்ய தகவல்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தலைமுறையில் இரு முன்னணி நடிகர்கள் ஆட்சி செய்வார்கள். அதுப்போல, 1960ல் சிவாஜி, எம்.ஜி.ஆர் தான் கோலிவுட்டை ஆண்டனர். கிட்டத்தட்ட அவர்களை இரண்டு அணி என்றே சொல்லலாம். ஆனால் இரண்டு அணியிலும் இருந்தவர்களில் வாலி தான் ரொம்பவே முக்கியமானவர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

இருவருக்குமே நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தவர். ஒருக்கட்டத்தில் தன்னுடைய எல்லா படத்திலும் வாலி தான் பாடல் எழுதுவார் என எம்.ஜி.ஆர் சொல்லக்கூடிய அளவு இருவருக்குமான நட்பு இருந்தது. ஆனால் இருவருக்கும் உரசல்களே இல்லை என்றால் இருந்தது. அதிலும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான் அது. 

எம்.ஜி.ஆர் தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாலியை அழைத்து இருக்கிறார். என்னடா திடீரென நினைத்தவர். அடித்து பிடித்து ஓடி இருக்கிறார். அவரை பார்த்தவுடன் ஷூட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர் வாலியை அழைத்து உன் பாட்டில் பொருள் குற்றம் இருக்கே என்றாராம். இதில் பதறிய வாலி என்ன அண்ணே அப்படி இருக்காதே என்கிறார்.

உடனே எம்.ஜி.ஆர், தமிழ் ஆசிரியரை அழைத்து அந்த பாடலில் எதும் தப்பு இருக்கா எனக் கேட்க அவரும் சற்று யோசித்துவிட்டு ஆமா இருக்கு என்று கூறிவிட்டாராம். இதைக்கேட்ட, எம்ஜிஆர் பார்த்துக்கோ எனச் சொல்லிவிட்டு கிளம்பிட்டாராம். எம்ஜிஆர் போனவுடன் அந்த தமிழ் ஆசிரியரை அழைத்து இருக்கிறார் வாலி.

இதையும் படிங்க: நெட்பிளிக்ஸ்ல கல்யாண கேசட் தான் வரல!.. நயன்தாராவோட அன்னபூரணிக்கும் வடக்கன்ஸ் வேட்டு வச்சிட்டாங்களே!

அவரோ உடனே உங்க பாட்டில் குற்றமெல்லாம் இல்ல அண்ணே. எம்.ஜி.ஆர் சொல்லுக்கு மறுப்பேச்சு பேச முடியாதுனு தான் அப்படி சொன்னேன் என்றாராம். இதை கேட்ட வாலி செட்டிக்குள் சென்று, அண்ணே வேற பாட்டு எழுதி தரேன். இந்த பாட்டின் வரியை மாற்ற முடியாது என பிடிவாதமாக சொல்லினாராம். 

இதை கேட்ட எம்.ஜி.ஆர், நீங்கள் கிளம்புங்க நாளைக்கு பேசிக்கலாம் என வாலியை அனுப்பி விட்டார்.  அன்று இரவு தயாரிப்பாளர் கால் செய்து கொஞ்சம் இறங்கி போய் இருக்கலாமே? இப்போது நீங்க இனி அவர் படத்திற்கு பட்டே எழுத முடியாம போச்சுல என்றாராம். எம்ஜிஆர் தன்னை எதிர்த்து பேசுபவர்களை அப்படியே ஒதுக்கிவிடுவாராம் ஆனால் வாலியோ எனக்கு கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

ஒரு வாரம் கழித்து உங்க பாடலை எம்.ஜி.ஆர் ஓகே செய்துவிட்டார். அதுமட்டுமல்ல படத்தில் இருந்த மீதமுள்ள 4 பாடல்களையும் உங்களையே எழுத சொல்லியுள்ளார் என ஆனந்த ஆச்சரியம் கொடுத்தாராம். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் வாலியின் நட்பு இன்னும் வலுவானது குறிப்பிடத்தக்கது. 1966ம் ஆண்டு வெளிவந்த அன்பே வா படத்தில் வந்த நாடோடி நாடோடி பாடல் தான் அது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு தான் கடைசி!.. இனி யாருக்கும் வாய்ப்பு இல்ல.. கமலின் அதிரடி முடிவு!..

google news
Continue Reading

More in Cinema History

To Top