Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தமிழை தவிர வேறெந்த மொழிப்படங்களிலும் கடைசி வரை விஜயகாந்த் நடிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்த விஜயகாந்த் மக்களின் நாயகனாகவே கடைசி வரை வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார்.
அவருடைய நினைவிடத்திற்கு போய் பார்த்தால் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எம்ஜிஆரை பின்பற்றி இந்த துறையில் நுழைந்த விஜயகாந்த் எம்ஜிஆரை போலவே மக்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார். இல்லாத பட்டோர்க்கும் உதவுதல், தன்னை நாடி வந்தவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது என கடைசி வரை இதை கடைப்பிடித்து வந்தார் விஜயகாந்த்.
இதையும் படிங்க: ‘லியோ’ படம் ஒன்னும் சும்மா ஓடல! அதுக்கு பின்னாடி இருந்தது இவங்கதான்.. பிரபல இயக்குனர் பகீர்
சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் ரசிகர்களாக இருந்தவர்கள் தன் நாயகனை வைத்து படம் எடுக்கும் சூழ் நிலைக்கு வரும் போது அந்த படத்தை எப்படியாவது வெற்றிபெற செய்ய வேண்டும் என கடுமையாக உழைப்பான். அப்படித்தான் ரஜினி வெறியனாக இருப்பவர் கார்த்திக் சுப்பாராஜ். பேட்ட படத்தை தரமாக கொடுத்தார்.
அதே போல் கமலின் வெறியனாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார். அதே போல் விஜயகாந்தை பின்பற்றியும் ஒரு இயக்குனர் வந்திருக்கிறார். அவர்தான் தமிழரன் பச்சைமுத்து. அட்டகத்தி தினேஷ், ஹரீஸ் கல்யாண் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் பக்கா விஜயகாந்த் வெறியனாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!
கதைப்படி தினேஷ் தன் வீடு முழுவதும் விஜயகாந்தின் ஏராளமான புகைப்படங்களை ஒட்டிவைத்திருப்பாராம். சிறுவயதில் இருந்தே விஜயகாந்தை பார்த்து பார்த்து வளர்ந்த ஒரு ரசிகனாக தினேஷ் நடித்திருக்கிறாராம். இந்தப் படம் வெளியாகி விஜயகாந்தை மீண்டும் நம் நினைவுக்கு கொண்டு வரும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது விஜயகாந்திற்காக சமர்ப்பிக்கப்படும் படமாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…