More
Categories: Cinema News latest news

வீர தீர சூரன் பட ரிலீஸில் இவ்ளோ சிக்கலா? துணிந்து இறங்கும் சீயான்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

படம் இந்த மாதம் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. வீர தீர சூரன் படத்தை பொருத்தவரைக்கும் பொங்கல் ரிலீஸ் ஆக வரவேண்டிய திரைப்படம். அந்த நேரத்தில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்ற ஒரு செய்தி பரவியதால் அந்த தேதியில் இருந்து வீர தீர சூரன் திரைப்படம் தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டது. அதன் பிறகு மார்ச் 27 என தேதியை லாக் செய்த வீர தீர சூரன் திரைப்படம் அந்த நாளில் வேறு எந்த திரைப்படங்களும் வெளியாகாதவாறு கவனமாக இருந்தது.

Advertising
Advertising

அதைப்போல கேரளாவில் எம்புரான் திரைப்படம் மற்றும் ஆந்திராவில் பவன் கல்யாண் நடித்து வரும் ஒரு திரைப்படம் இரண்டு படங்களுமே மார்ச் 27ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகும் என ஒரு தகவல் இருந்தது. ஆனால் இப்போது பவன் கல்யாண் திரைப்படம் 27ஆம் தேதி வரவில்லையாம். ஆனால் எம்புரான் திரைப்படம் அதே தேதியை லாக் செய்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல அந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி இருக்கிறதாம். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பொருத்தவரைக்கும் தான் வாங்கும் எந்த ஒரு படமானாலும் அதை தமிழ்நாட்டில் அதிக ஸ்கிரீனில் ரிலீஸ் செய்வது வழக்கம். அப்படி இருக்கையில் வீர தீர சூரன் திரைப்படத்திற்கு எத்தனை ஸ்கிரீன் கிடைக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது.

இருந்தாலும் துணிந்து இறங்குவோம் என்ற முடிவில் ஒட்டுமொத்த படக்குழுவும் இறங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை விதவிதமான கெட்டப்புகளை போட்டு அந்த படமும் சரியாக ஓடாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதுவும் தூள் படத்தில் பிறகு இந்த படத்தில் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார் .அதனால் ஒரு ஆழமான கருத்தை மையப்படுத்தி இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் நம்பி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Published by
Rohini

Recent Posts