அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..

Jigarthanda double x: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜிகரதண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தை சினிமா விமர்சகர்கள் கொண்டாடவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

எனவே, படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது. படத்தின் கதை, திரைக்கதை சிறப்பாக இருப்பதாகவும் எஸ்.ஜே சூர்யா அசத்தலாக நடித்திருப்பதாகவும், இதுவரை ராகவா லாரன்ஸ் எந்த படத்திலும் இப்படி நடித்தது இல்லை என்றும் பலரும் கூறினார்கள்.

இதையும் படிங்க: அண்ணனுக்காக உயிரயே கொடுக்கும் தம்பி! விஜய் – அட்லீ பின்னி பிணைய இதுதான் காரணமா?

ஒருபக்கம் சினிமா துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை டிவிட்டரில் பாராட்டினர். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினி இப்படத்தை பார்த்துவிட்டு பெரிய பாராட்டு கடிதமே எழுதியிருந்தார். எஸ்.ஜே.சூர்யா நடிகவேள் எம்.ஆர்.ராதா போல நடித்திருக்கிறார் என பாராட்டி ஹைலைட் செய்துவிட்டார்.

பொதுவாக ஒரு படத்திற்கு அடுத்து அதேபெயரில் வெளியானால் அது அப்படத்தின் இரண்டாம் பாகமாத்தான் வெளியாகும். ஆனால், இப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் வெளியானது. எனவே, பாபிசிம்ஹா - சித்தார்த் நடித்து வெளியான முதல் பாகத்திற்கும் இப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது.

இதையும் படிங்க: கதை பிடித்திருந்தும் நடிக்காத ரஜினி!. கேப்பில் புகுந்த வேற இயக்குனர்.. கவுதம் மேனனோட பேட் லக்!..

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ‘அசால்ட் சேதுவுக்கு ஒரு அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்த போது பிறந்த இதைதான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். முதல் பாகத்தில் நான் சிறுவனாக இருக்கும்போதே என் அப்பா ஒரு மில்லில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார் என சேது கதாபாத்திரத்தில் வரும் பாபி சிம்ஹா சொல்லுவார். அப்போது அவருக்கு சின்ன வயது என்பதால் அவரின் அப்பாவுக்கு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியாது.

ஆனால், உண்மையில் அவரின் அப்பா ஒரு டிராஜடியில் இறந்திருந்தால் என யோசித்த போது பிறந்த கதைதான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்திக் சுப்புராஜ் சொல்வதை வைத்து பார்க்கும்போது அசால்ட் சேதுவின் அப்பாதான் ராகவா லாரன்ஸ். படத்தின் இறுதியில் அவரின் மகனுக்கு சேது என்கிற குழந்தை இருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..

 

Related Articles

Next Story