கோட் படத்தில் வெங்கட்பிரபு வச்ச செம டிவிஸ்ட்!. ஆனா யாருக்குமே தெரியாம போச்சே!...
Goat: கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் ‘ஹிட்டன் லேயர்’ என ஒன்றை சொல்கிறார்கள். அதாவது வசனம் மூலமும், விஸ்வலாகவும் ஒன்றை சொல்லாமல் ஏதேனும் ஒரு புகைப்படம் அல்லது பொருள் மூலம் இயக்குனர் ஒரு விஷயத்தை மறைமுகமாக சொல்லியிருப்பார்.
மணிரத்னம், செல்வராகவன் ஆகியோரின் படங்களில் இதை அதிகம் பார்க்க முடியும். பொதுவாக ஹிட்டன் லேயர்ஸ் பற்றி நல்ல ஞானமுள்ள ரசிகர்களால் மட்டுமே அதை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேபோல், ஒரு இயக்குனர் ஒரு படத்தை ஒரு விதமாக சொல்ல நினைத்திருப்பார்.
ஆனால், அதை சரியாக ரசிகர்களுக்கு கடத்தி இருக்கமாட்டார். எனவே, ரசிகர்கள் வேறு மாதிரி அதை புரிந்து கொண்டிருப்பார்கள். பல வெற்றிப்படங்களிலேயே அது நடந்திருக்கிறது. இப்போது விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் இது நடந்திருக்கிறது என சொல்கிறார்கள்.
இந்த படத்தில் விஜய்க்கு அவரின் மகன் விஜயே வில்லனாக இருப்பது போல திரைக்கதை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. படத்தின் இறுதிக்காட்சியில் மகன் விஜயை அப்பா விஜய் சுட்டுக்கொள்கிறார். இந்நிலையில், கடைசியில் விஜய் சுட்டுக்கொள்வது மட்டுமே விஜயின் மகன் எனவும், அதற்கு முன் மற்ற காட்சிகளில் வந்தவர், அதாவது மீனாக்ஷி சவுத்திரியை கொன்றது எல்லாம் விஜய் மகன் போலவே செய்த குளோனிங்தானாம்.
ஆனால், அதை வெங்கட்பிரபு சரியா சொல்லாமல் போய்விட்டார். அதனால், எல்லா காட்சியிலுமே வந்தது ஜீவன் கதாபாத்திரத்தில் வந்த விஜயின் மகன்தான் என்றே ரசிகர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஹாலிவுட்டில் வெளிவந்த ஜெமினி மேன் படத்தில் இன்ஸ்பிரேஷன் ஆகியே வெங்கட்பிரபு கோட் படத்தை இயக்கியிருக்கிறார்.
அந்த படத்தில் ஹீரோவை போல குளோனிங் செய்து அவரை கொல்ல வில்லன் குரூப் அனுப்பும். அதை அப்படியே எடுத்தால் காப்பி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதாலேயே வெங்கட்பிரபு கதையை கொஞ்சம் மாற்றி இருக்கிறார் என கணிக்கப்படுகிறது. ஆனால், அவர் என்ன நினைத்து எடுத்தார் என்பது சரியாக யாருக்கும் புரியாமல் போய்விட்டது என்கிறது படக்குழு.
இதையும் படிங்க: விஜயின் மாஸ் என்னன்னு ‘கோட்’ படம் காட்டிருச்சி!.. இவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும்..