அறிவு இல்ல உங்களுக்கு? ரோபோ சங்கர் மகளை பார்த்து இப்படி ஒரு கேள்வியா? என்ன நடந்துச்சு தெரியுமா

robo
Robosankar Indreja: விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு அதன் மூலம் பிரபலமானவர் ரோபோசங்கர். ஆரம்பத்தில் பாடி பில்டராக இருந்த ரோபோ சங்கர் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். இதன் மூலம் கிடைத்த புகழால் வெள்ளித்திரையில் நடிகராகும் வாய்ப்பு ரோபோ சங்கருக்கு கிடைத்தது.
தமிழில் ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு பங்காளியாக படமுழுக்க வந்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த ரோபோ சங்கருக்கு திடீரென உடல் நிலை கோளாறு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டார். அதன் பின் மிகவும் போராடிதான் பழைய நிலைக்கு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு நெருக்கமான தோழன், தோழி இவர்கள்தான்!.. யாருமே யோசிக்க முடியாத மாதிரி சொல்லிட்டாரே ரஜினி!
சமீபத்தில்தான் இவருடைய மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. சொந்த மாமன் மகனை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் இந்திரஜா. இந்த நிலையில் பிரபல தனியார் சேனல் ஒன்று ரோபோசங்கர் குடும்பம் மொத்தத்தையும் நேர்காணல் நடத்தியது. பேட்டியை எடுத்தவர் விஜய் டிவி புகழ் குரோஷி. அப்போது இந்திரஜாவுக்கும் அவருடைய கணவருக்கும் 16 வயது வித்தியாசம் இருக்கே? இப்படி இருந்தால் எப்படி அவர்களுக்குள் புரிதல் ஏற்படும்? என்ற கேள்வியை கேட்டார்.
இதை கேட்டதும் இந்திரஜா மிகவும் கோபமுற்று பேட்டியே வேண்டாம் என எழுந்து போய்விட அவருடைய அம்மா பிரியங்காதான் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். எனக்கும் என் கணவருக்கும் 16 வயது வித்தியாசம் இல்லை. 9 வயதுதான் வித்தியாசம். எத்தனை முறை இதை சொல்வேன். இந்த மாதிரி கேள்வி கேட்குற உங்களுக்கு அறிவு இல்லையா? என்ன மாதிரி கேள்வி கேட்கவேண்டும் என்ற ஒரு வரைமுறையே இல்லையே? என்று கண்டபடி பேசினார்.
இதையும் படிங்க: 6 முறை கமலுடன் மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது உலகநாயகனா?.. தளபதியா?.. வாங்க பார்க்கலாம்..
அதன் பிறகு ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா ‘இதை நாம் தான் அமைதியாக சொல்லவேண்டும். இவங்க இல்லை என்றால் வேற எந்த சேனலாவது இதே கேள்வியை கேட்க வாய்ப்புண்டு. அதனால் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம்’ என கூறி அந்த காலத்தில் எல்லாம் யாரும் இப்படி திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று நிருபரை திருப்பி கேள்வி கேட்டார்.