Connect with us

Cinema History

பிரபுசாலமன் படப்பிடிப்பில் நடந்த விபத்து!.. அதிர்ச்சியில் உறைந்த கதாநாயகன்!.பெரும் சம்பவம்தான்..

தமிழ் சினிமாவில் கமர்சியலாக மட்டும் இல்லாமல் நிஜத்தன்மையுடன் சினிமாவை அணுகும் சில இயக்குனர்களில் பிரபு சாலமன் முக்கியமானவர். பிரபு சாலமன் இயக்கும் திரைப்படங்களில் மற்ற திரைப்படங்களில் உள்ளது போல ஐம்பது பேரை ஒரே நேரத்தில் அடிக்கும் கதாநாயகன், மாதிரியான காட்சிகள் எல்லாம் இருக்காது.

நிஜ வாழ்க்கையில் என்ன நடக்குமோ அந்த மாதிரியான விஷயங்களை திரைப்படங்களுக்கும் கொண்டு வருவார் அதனாலயே பிரபு சாலமன் திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு.

prabhu soloman

prabhu soloman

அவரது திரைப்படங்களான மைனா, கயல், கும்கி, தொடரி போன்ற அனைத்து திரைப்படங்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை காட்டும் விதமாகவே திரைப்படம் அமைந்திருக்கும். அந்த திரைப்படங்களுக்குள்ளேயே சமூக கருத்துக்களை பேசும் அதே நேரம் படம் சிறப்பாக வருவதற்காக வெகுவாக கஷ்டப்படக்கூடியவர் பிரபு சாலமன்.

படத்தில் நடந்த சம்பவம்:

அப்படி ஒரு சம்பவம் அவரது முதல் படமான மைனா திரைப்படத்தில் நடந்தது. மைனா திரைப்படத்தில் ஒரு பேருந்து விபத்து காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியை படமாக்கும் பொழுது நிஜமாகவே ஒரு கிரேனை கொண்டு பேருந்தை கட்டி தொங்கவிட்டு அதில் படப்பிடிப்பை நடத்தினர்.

படத்தின் நாயகன் விதார்த் பேருந்துக்குள் இருந்த சமயத்தில் தவறுதலாக கிரேன் இழுக்கப்பட்டு அந்த பேருந்தில் விழுந்து பேருந்து நொறுங்கி விட்டது ஆனால் அதற்கு சில நொடிகளுக்கு முன்பே விதார்த் வெளியே வந்து விட்டார். அவர் வெளியே இறங்குவதற்கும் விபத்து நடப்பதற்கும் சரியாக இருந்துள்ளது அதை பார்த்து கை,கால் நடுங்க மயக்க நிலைக்கு சென்றுள்ளார் விதார்த்.

ஆனால் இயக்குனருக்கு இந்த விஷயம் தெரியவில்லை அவர் விதார்த் பேருந்துக்குள் இருந்ததால் இறந்துவிட்டார் என்று நினைத்திருந்தார். பிறகு தம்பி ராமையாதான் விதார்த் மயக்க நிலையில் உள்ளதை கண்டறிந்துள்ளார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் விதார்த் பகிர்ந்து இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top