விஜய் படத்துல கண்ணியம் இருக்கு! ஆனா அவர் படத்துல? ஐயோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போல
Actor Dhanush: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனுஷ் குடும்பம் தான் கெடுத்து குட்டி சுவராக்கியது என இயக்குனர் பிரவீன் காந்தி கூறிய கருத்து சோசியல் மீடியாவில் பெரும் வைரலானது. இதைப் பற்றி மேலும் அவர் கூறும் போது அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக துள்ளுவதோ இளமை படத்தை கூறலாம் என கூறியிருக்கிறார்.
அதாவது 16 லிருந்து 22 வயது என்பது மிகவும் சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் வயது. அந்த நேரத்தில் செல்வராகனின் பெரும்பாலான படங்கள் அப்பாவை கிண்டல் பண்ணுவது, பெரியவர்களை மதிக்காமல் இருப்பது மாதிரியான படங்களாகவே வெளிவந்தன. அப்போ இந்த வயதில் அந்த மாதிரியான படங்களை பார்க்கும் இளசுகள் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள்.
இதையும் படிங்க: ‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?
இவர் படங்களுக்கு முன் இந்த மாதிரி படங்கள் வந்ததாக தெரிவதில்லை. இரத்தக்கண்ணீர் படம் மட்டுமே அம்மாவை டார்கெட் செய்து வெளியான படமாகும். அதன் பிறகு அப்படியான படங்கள் வெளியாகவில்லை. செல்வராகவன் படம் மட்டுமே இந்த மாதிரியான கோணத்தில் வெளியாகியிருக்கின்றது. ஒரு மனிதனை பொறுத்தவரைக்கும் வீட்டிற்குள் எப்படி மரியாதையாக இருக்கிறானோ சமூகத்திலும் அப்படியான மரியாதையுடன் இருப்பான்.
அந்த வகையில் ஏ.ஆர் .ரஹ்மான் அவருடைய தாய்க்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். யாருமே அம்மா என இப்பொழுது கூப்பிடுவது இல்லை. தாய்கிழவி என்றுதான் கூப்பிடுகிறான். அதற்கு காரணம் தனுஷின் தாய்கிழவி பாடல்தான். மேலும் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் அழகான காதல் படம். ஆனால் அதன் இரண்டாம் பாதியில் அந்தரங்க உறவை பற்றி கூறியிருப்பார் செல்வராகவன்.
இதையும் படிங்க: விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார் தெரியுமா? மற்ற விருதுகளின் விவரங்கள்!…
இதைதான் நான் சொல்கிறேன். காதல் கொண்டேன் படத்தை அதற்கு 20 வருடத்திற்கு முன்பு ரிலீஸான பன்னீர் புஷ்பங்கள் படத்தோடு ஒப்பிட்டேன். பன்னீர் புஷ்பங்கள் படத்திலும் காதல் இருக்கும். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கும். அதே போல் காதலுக்கு மரியாதை படமும் ஒரு கண்ணியமான காதல் படம். ஆனால் செல்வராகவன் , தனுஷ் படங்களை பார்க்கும் போது ‘மேட்டரே முடிஞ்சிருச்சு. சேர்ந்தால் என்ன? பிரிந்தால் என்ன?’ என்பது மாறி ஆகிவிட்டது.
அப்ப உள்ள காதல் வேற. இப்ப உள்ள காதல் வேற. அப்படி கூட படத்தில் காட்டலாம் அல்லவா? என்ற கோணத்தில் யோசித்தாலும் அந்த 16 முதல் 20 வயதுதான் உங்களை டிசைன் பண்ணுகிற வயது. அந்த வயதில் பெற்றோர்களை நீங்கள் பெருமைப்பட வைக்க வேண்டும். இதற்கு மத்தியில் நான் ஒன்று சொல்கிறேன். ரசிகர்களின் மேல் மரியாதை அதிகம் வைத்திருப்பவர்கள் ஆந்திரா நடிகர்கள்தான்.
இதையும் படிங்க: இப்ப என்ன பெரிசா பர்ஸ்ட்லுக், போஸ்டர்னு… அப்போ பாக்கியராஜ்கிட்ட இருந்த தில்லு யாருக்காவது இருக்கா?
அவர்களிடம் இந்த மாதிரியான கதைகளை சொல்லிப் பாருங்கள். நடிக்கவே மாட்டார்கள். ஏனெனில் அது வளர்ந்த ஹீரோவாக இருந்தாலும் சரி. முன்னணி ஹீரோவாக இருந்தாலும் சரி. பெற்றோர்களை இன்று வரை மரியாதையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திரா நடிகர்கள் என பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒட்டுமொத்தமாக அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்.