Connect with us

Cinema News

டிடிஎஃப் வாசனுக்கு ஒரு ரூல்ஸ்.. அஜித்துக்கு ஒரு ரூல்ஸா? இதென்னப்பா புது பிரச்சினை?

Ajith TTF Vasan: கோலிவுட்டில் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி அவருடைய பொழுதுபோக்கு என்றால் பைக் ரேஸ், கார் ரேஸ். ஆரம்பத்திலிருந்து பைக்கின் மீது அலாதி பிரியம் கொண்டவர் அஜித்.

நிறைய சாம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏகப்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். பைக்கை எடுத்துக் கொண்டு இந்த உலகத்தை சுற்றி வர வேண்டும் என்பதையே தன்னுடைய முதல் கொள்கையாகவே வைத்திருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க: நடிகைக்கு தெரியாமல் திடீர் முத்தம் கொடுத்த ஆடுகளம் நரேன்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

அதன் காரணமாகத்தான் படப்பிடிப்பு போக அவ்வப்போது பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் அஜித்தையும் டிடிஎஃப் வாசனையும் தொடர்புபடுத்தி ஒரு புது பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

பிரபல சித்ரா லட்சுமனிடம் ரசிகர் ஒருவர் ‘டிடிஎஃப் வாசன் விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவருடைய வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதே அஜித்தும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதை அனைவரும் வியந்து பார்த்தார்களே தவிர அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் புகாரும் எடுக்கப்படவில்லை இது ஏன்’ என கேட்டார்.

இதையும் படிங்க: இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா…

அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் அஜித் வேகமாக காரை ஓட்டியது ஒரு திரைப்படத்திற்காக. ஆனால் டிடிஎஃப் வாசன் அந்த பைக்கை ஓட்டியது நடைமுறை வாழ்க்கையில். அந்த விபத்தை நீங்கள் சரியாக பார்த்தீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. டிடிஎஃப் வாசன் அந்த பைக்கை எடுத்துக்கொண்டு வந்த வேகத்தையும் அது தூக்கி வீசப்பட்ட வேகத்தையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்.

அந்த நேரத்தில் குறுக்கே ஒரு பஸோ லாரியோ அல்லது வேறொரு வாகனமோ குறுக்கே வந்திருந்தால் அதனுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கை விட்டுவிட்டு அதில் இருக்கும் உண்மை தன்மையையும் நியாயத்தையும் மட்டுமே பாருங்கள் என அந்த ரசிகருக்கு சித்ரா லட்சுமணன் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top