தமிழ் சினிமாவின் கொலாம்பஸ் கமல்! தக் லைஃப்-க்காக இப்படி ஒரு புது முயற்சியா?

thug_kamal
kamal: உலகநாயகன் முதன்முறையாக இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் ப்ரமோஷன் செய்ய போகிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் அவருடைய படம் வரும் பொழுது பயங்கரமாக புரமோஷன் செய்வதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா ,துபாய் ஆகிய நாடுகளுக்கு தான் செல்வார்கள். அதைத் தாண்டி போனது கிடையாது .
ஆனால் தக் லைஃப் படத்திற்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாக இருக்கின்றது. மொத்த பட குழுவும் ஆஸ்திரேலியாவில் இறங்கி அங்கு இருக்கிற தமிழர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய அரங்கில் ஒன்றிணைத்து அங்குள்ளவர்களிடம் உரையாடல்களை நிகழ்த்தப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் எஃப் எம் எஸ்ஸில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஒரு குறிப்பிடத்தக்க ஓபன் இருப்பதாக சொல்கிறார்களாம்.
தமிழ் படங்களுக்கு அங்கு ஒரு பெரிய வசூல் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அதை டார்கெட் செய்து தக் லைப் பட குழு அங்கு பிரமோஷனை நடத்த இருக்கிறார்களாம். ஆனால் மற்ற படங்களை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் துபாயை நோக்கி தான் படையெடுத்து வருகிறார்கள். ஆனால் கமல் இந்த படத்திற்காக முதல் முறையாக ஆஸ்திரேலியாவை பிளான் செய்திருக்கிறார்.
எப்பொழுதுமே கமல்தான் ஓவர் சீஸ் வியாபாரத்தையே தமிழ் சினிமாவிற்கு காட்டி கொடுத்த கொலம்பஸ். அதுதான் உண்மையான விஷயம் .அதற்கு முன்பு வரை ஓவர்சீஸ் வியாபாரம் பற்றி தமிழ் சினிமாவிற்கே தெரியாது. தமிழ் படங்கள் இவ்வளவு வசூலை அள்ளுமா என்ற உண்மையும் அவர்களுக்கு தெரியாது .அது மட்டுமல்ல கமல் நிறைய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து இருக்கிறார்.

முதல் டிஜிட்டல் திரைப்படம், முதல் டிடிஎச் திரைப்படம், முதல் ஹாலிவுட் படம் என எல்லாமே கமல் தான் அறிமுகம் செய்திருக்கிறார். இதெல்லாம் சினிமாவிற்கான டெக்னிக்கல் விஷயம். இதையும் தாண்டி வியாபார ரீதியாகவும் கமல் தான் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார் .அந்த வகையில் இப்போது முதன் முறையாக ஒரு படத்திற்காக ஆஸ்திரேலியா வரைக்கும் ப்ரோமோஷன் செல்கிறார்கள் என்றால் அது இந்த தக்கலைப் படத்திற்காக தான்.