அஜித் படம் வாய்ப்பே இல்ல! அவருக்கும் இவருக்கும் ஏணி வச்சாக் கூட எட்டாது - அப்போ வரிசை கட்டி நின்னது?
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின்ம் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. மங்காத்தா என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு அஜித்தும் அர்ஜூனும் சேர்ந்து நடிக்கும் படம்.
இதையும் படிங்க: நிறத்தைக் காட்டி ஒதுக்கப்பட்ட பிரபலம்! பின்னாளில் விஜய்க்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த அந்த நடிகர்
அதனால் மீண்டும் அந்த காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித்தின் கைவசம் ஒரு சில படங்களை வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கிறார்.
அதனை அடுத்து வெற்றிமாறன் கூட்டணியிலும் இணைய இருப்பதாக ஒரு டாக் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் பேரும் அடிபட்டு வருகிறது. ஆதிக் மற்றும் வெற்றிமாறன் இவர்களுக்கு பிறகு பிரசாந்த் நீலுடன் அஜித் இணைய வாய்ப்பிருப்பதாக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரைகுறை உடையில் குளியல் போடும் தர்ஷா குப்தா!.. காஜி ஃபேன்ஸ் லைக்ஸ் சோ மச்!..
ஆனால் இது குறித்து ஒரு சினிமா பத்திரிக்கையாளர் ‘பிரசாந்த் நீல் நிஜமான ஒரு பேன் இந்தியா இயக்குனர். ஆனால் அஜித் இங்கு தமிழ் நாட்டில் மட்டும்தான் ஹீரோ. பிரசாந்த் நீல் இண்டர்நேஷனல் லெவலில் படம் எடுத்துக் கொண்டிருக்க அஜித்தை வைத்து எப்படி படம் பண்ணுவார்’ என கூறியிருக்கிறார்.
அதனால் இது ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே வெளியாகும் செய்தி என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.