என்னத்த பேசுறது? வடிவேலு பாணியில் விழிபிதுங்கி நிற்கும் விஜய் - ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது

by Rohini |
vijay
X

vijay

Actor Vijay: சமீபகாலமாக பரபரப்புக்கு பேர் போன நடிகராகவே திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். அரசியலில் குதிக்க போகிறார் என்ற செய்தியறிந்து மாறி மாறி கோல் போட்டு வருகிறார்கள். எனினும் எதையும் கூலாக ஹேண்டில் செய்யும் விஜய் இதையும் சாதாரணமாகவே பார்க்க ஆரம்பித்தார்.

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். செய்வதை செய்து கொண்டுதான் இருப்பேன் என்ற முறையில் மக்களுக்கு தேவையானதை செய்துவருகிறார். சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லையில் போய் நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தார் விஜய்.

இதையும் படிங்க: தனக்குத் தானே வெட்டிக்கிட்ட குழி! அயலான் பட ரிலீஸில் இருக்கும் சிக்கல் – இந்த முறை எஸ்கேப் ஆவாரா SK?

இது மற்ற அரசியல் சார்ந்த தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தாலும் வருங்கால அரசியலை எதிர் நோக்கி இருக்கும் விஜய் தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். அதே போல் ஒவ்வொரு விஜய் பட ரிலீஸிலும் எதாவது ஒரு பிரச்சினை இருக்கும்.

தளபதி 68 க்கும் பிறகு நிச்சயமாக அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறார் விஜய் என்று தெரிந்ததும் சும்மா இருப்பார்களா? இப்பொழுது இருந்தே குடைச்சலை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நிலையில் விஜயின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில்தான் நடந்துவருகிறதாம்.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் கடைசி படம் என்னுடைய முதல் படமாகும் என நினைக்கவில்லை.. இயக்குனரின் கவலை!

இந்த மாதம் முழுக்க சென்னையில்தான் படப்பிடிப்பாம். இது ஒரு பக்கம் இருக்க கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. அந்த விழாவிற்கு ரஜினி, கமல் கட்டாயமாக வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

ஆனால் விஜய், அஜித் ? என்ற கேள்வி இருந்தது. ஒரு வேளை அஜித்துக்கு வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றால் கண்டிப்பாக அவர் வருவது சந்தேகம்தான். ஆனால் விஜய்க்கு சென்னையில் தான் படப்பிடிப்பு. அதுமட்டுமில்லாமல் கலைஞர் விழாவை முன்னிட்டு அன்று மட்டும் அனைத்து படப்பிடிப்பும் ரத்து என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு காய்ச்சல்.. இன்னைக்கு நடிக்கமாட்டேன்!. எஸ்கேப் ஆன மன்சூர் அலிகானை மடக்கிய கேப்டன்…

அதனால் வேறு வழியின்றி விஜய் கண்டிப்பாக கலந்து கொள்ளத்தான் வேண்டும். அப்படியே வந்தாலும் எதிர்கால அரசியலை நோக்கி இருக்கும் விஜய் என்ன பேசுவார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

Next Story