17 நாள் பக்கத்துல இருந்து பாத்தேன்!.. பாலா சூர்யா இடையே என்ன நடந்தது?.. நடிகை சொன்ன பகீர் தகவல்…
நடிகர் சூர்யா பாலா இவர்களின் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக இருந்த படம் வணங்கான். வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து கொண்டிருக்கும் போதே பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதனால் படப்பிடிப்பு சிறிது நாட்கள் பாதியிலேயே நின்று போனது. அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்தும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது .ஆனால் என்ன பிரச்சனை என்று தெளிவாக தெரியாத நிலையில் மொத்தமாக வணங்கான் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நின்று போனது.
முதலில் வணங்கான் படத்தை சூர்யாவின் 2d தான் தயாரிக்க இருந்தது .அதன் பிறகு இந்த படத்தில் இருந்து சூர்யா விலக அவருடைய தயாரிப்பு நிறுவனமும் விலகி விட்டது. இப்பொழுது அந்தப் படத்தை நடிகர் அருண் விஜயை வைத்து மீண்டும் தொடங்கி இருக்கிறார் பாலா. படத்தை பாலா தான் தயாரிக்கவும் செய்கிறார்.
கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் சூர்யாவை வைத்து எப்படி காட்சிகள் எடுத்தாரோ அதே காட்சிகளை வைத்து தான் அருண் விஜயை வைத்தும் எடுத்துக் கொண்டு வருகிறாராம் பாலா. இந்த நிலையில் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிப்பதாக இருந்தது .அவரும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
அவர் இப்பொழுது ஒரு பேட்டியில் வணங்கான் திரைப்படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது 17 நாட்கள் அந்த படப்பிடிப்பு சமயத்தில் கீர்த்தி செட்டி இருந்தாராம். அதன் பிறகு படம் நின்று விட்டதால் தனக்கு வேறொரு படங்கள் கமிட் ஆகி இருந்ததனால் இந்த கால்சீட்டுக்கு ஏற்றபடி தன்னால் வணங்கான் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.
மேலும் அந்த 17 நாட்கள் சூர்யாவும் பாலாவும் எப்படி இருந்தார்கள் என்று என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது. அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்ததாகவும் நல்ல ஒரு அன்பு இருந்ததாகவும் கீர்த்தி செட்டி கூறியுள்ளார்.