தேசிய விருதுக்கு பதிலா வீடுகட்டி கொடுத்திருக்கலாம்! வீடு இல்லாமல் தவிக்கும் ‘கடைசி விவசாயி’ குடும்பம்
Kadaisi Vivasayi: மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகிபாபு நடிக்க உருவான திரைப்படம்தான் கடைசி விவசாயி. இவர்கள் இருவரை தவிற மற்ற அனைவரும் இந்தப் படத்தில் புது முகங்களே. தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இயக்குனராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் மணிகண்டன். இவர் எடுக்கும் படங்களில் கருப்பொருள் மிக ஆழமானதாக இருக்கும்.
கேளிக்கையை தாண்டி ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு உணர்த்த விரும்புபவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் நீண்ட நாளுக்கு பிறகு வெளியான திரைப்படம்தான் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் , ஒரு மனிதன் விவசாயம் இல்லாமல் எந்தளவுக்கு துடிக்கிறான் என்பதை பற்றி விளக்கும் வகையில் இந்தப் படம் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!
மாயாண்டி என்ற ஒரே கதாபாத்திரத்தின் பின்னாடியே இந்த கதை நகரும். ஒரு வயது முதிர்ந்தவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் பெயர் நல்லாண்டி. அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முறையாக செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பார் நல்லாண்டி. காளைகளை மேய்பதிலிருந்து கோழிகளுக்கு உணவளிப்பது வரை பழைய மண்சட்டியில் சாப்பிடுவது என மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார் நல்லாண்டி.
83 வயதான நல்லாண்டி இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பார். ஒருவேளை தெரிந்த முகம் கொண்ட நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்திருந்தால் கூட இந்தளவுக்கு மக்கள் ரசித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். கூடவே விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ஆச்சரியப்பட வைக்கிறது. படம் வெளியாகி தேசிய விருதை வென்றது.
இதையும் படிங்க: விஜயின் சாய்பாபா தரிசனம்! தாய் ஷோபாவுக்காக கட்டிய கோயிலா அது? வெளியான ஷாக்கிங் தகவல்
இந்த நிலையில் கடைசி விவசாயி படத்தில் நடித்த ஹீரோவே நல்லாண்டிதான். அவர் நடித்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தாலும் அவர் குடும்பம் வீடு இல்லாமல் தவித்து வருகிறது. அவர் கடந்த 2019 ஆம் ஆண்டுதான் காலமானார். இருந்தாலும் அவர் குடும்பம் வீடின்றி தவிக்கிறார்கள். இந்த செய்தி பார்த்தாலாவது உடனே வீடு கட்டி கொடுத்தால் அந்த நடிகருக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.