விஜயால கண்ட கனவு எல்லாம் நாசமா போச்சே! கடுப்பில் விஷால்.. எங்க வந்து நிக்குது பாருங்க?

vishal
Vijay Vishal: தளபதி, புரட்சி தளபதி என தமிழ் சினிமாவில் விஜய், விஷால் இருவரும் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜயின் தீவிர ரசிகராக விஷால் இருக்கிறார். அவரை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையிலும் விஷால் இருக்கிறார். மேலும் அரசியலிலும் விஜய்க்கு பக்கபலமாக இருப்பேன் என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது தனியாக தான் ஒரு கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லி இருக்கிறார். அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரத்தினம். மார்க் ஆண்டனி என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரத்னம் .
இதையும் படிங்க: கமலிடம் மாட்டிக்கொண்டு முழித்த ஹரி!.. ஜஸ்ட் மிஸ்!.. நல்லவேளை உண்மைய சொல்லிட்டாரு!..
இந்த படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ஹரியுடன் இணைந்து விஷால் பூஜை, தாமிரபரணி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் போல ஒரு நல்ல ஓப்பனிங் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் ரத்னம் திரைப்படத்தை தமிழகத்தில் சின்ன சின்ன தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்திருக்கிறார்களாம். பெரிய தியேட்டர்களில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவில்லையாம். அதனால் எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்ன என்பதை விசாரிக்கும் போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த தப்பு… ஓபனாக ஒப்புக்கொண்ட இயக்குனர் தரணி!…
சில தினங்களுக்கு முன்பு கில்லி திரைப்படத்தை மறுஒளிபரப்பு செய்து திரையரங்குகளில் வெளியிட்டனர். அதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை நாங்கள் இப்போது எடுக்க மாட்டோம். கில்லி திரைப்படத்தின் மூலம் எங்களுக்கு பெருமளவு லாபம் வந்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றால் நீங்கள் சிறிய திரையரங்குகளில் ரத்னம் திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதின் பெயரில்தான் ரத்னம் திரைப்படம் சிறு சிறு திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டதாம். அதனால் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது