லைட்டே இல்லாம சூட்டிங்கா? ‘கங்குவா’ படத்தில் இப்படி ஒரு மேஜிக்கா? ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை கொண்ட நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சூர்யா. தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 மொழிகளில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ் வீடியோக்கள் என வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கொடைக்கானலில் ஒரு ஏரியாவில் நடைபெற்றதாம். அப்போது அந்தப் படத்தின் கேமராமேனாக இருப்பவர் வெற்றி. மேலும் படத்தில் மெயின் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் நட்டி.
இவர் ஏற்கெனவே ஒரு பிரபலமான கேமராமேனும் கூட. தமிழ், ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் கேமராமேனாக பணியாற்றியிருக்கிறார். இருந்தாலும் நடிப்பிலும் ஒரு சிறந்த நடிகர். இப்படி இருக்கையில் கங்குவா திரைப்படத்தில் ஒரு காட்சியை படமாக்கும் போது அந்த கேமராமேன் வெற்றி ஒரு லைட் கூட பயன்படுத்தவில்லையாம்.
இதை பார்த்த நட்டி வெற்றியிடம் என்னப்பா லைட்டே இல்லாம எடுக்குற. சரியா வருமா? என்றுக் கேட்டிருக்கிறார். அதற்கு வெற்றி அதெல்லாம் சரி வரும் சார் என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் நட்டிக்கு இதில் உடன்பாடே இல்லையாம்.
இதையும் படிங்க : ரஜினி – லோகேஷ் படத்தில் 15 முன்னணி நடிகர்கள்.. பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் தலைவர் 171…
நேராக இதை சூர்யாவிடம் போய் சொல்லியிருக்கிறார். சூர்யாவும் பார்த்து வெற்றியிடம் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்டு வருகிறது. லைட் இல்லாம சரிவருமா? ஒரு வேளை சரியாக அமையாத போது மீண்டும் இந்தக் காட்சியை முதலில் இருந்து எடுக்க முடியாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் வெற்றி எதற்கு மசியவில்லையாம். கடைசியில் அவர் எடுத்ததை போட்டுக் காட்ட சூர்யா மிரண்டு போய்விட்டாராம். லைட் இல்லாம எப்படி சூட்டிங்? என அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார்களாம்.