அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

ajith
Director Saran: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனரகா இருப்பவர் சரண். கே. பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தவர். தனக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இவர் முதன் முதலாக அஜித்தை வைத்து காதல் மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடன் விவேக்கும் நடித்தார். இந்தப் படத்தில் மானு என்ற நடிகையை அறிமுகம் செய்தார் சரண்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மானுவை சரணிடம் முதலில் அறிமுகம் செய்து வைத்ததே விவேக்தானாம். அந்த நேரத்தில் சரணுக்கும் மானுவுக்கும் இடையே காதல் இருந்ததாக அப்போதைய பத்திரிக்கையில் பரவலாக செய்தி வெளியானது.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்ப காட்டி வெறியேத்தும் நித்தி அகர்வால்!.. பொங்கலுக்கு இது செம ட்ரீட்டு!..
இதைப் பற்றி சரணிடமே கேட்ட போது ஏன் அப்படி செய்தி வெளியானது என்பதை கூறியிருக்கிறார். அதாவது இந்தப் படத்தில் ஒரு புதுமுக நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என எண்ணினாராம் சரண். அப்போது விவேக் காதல் மன்னன் திரைப்படத்தில் அசோசியேட்டிவ் இயக்குனராக பணிபுரிந்தாராம்.
அதனால் விவேக் சில புதுமுக நடிகைகளின் புகைப்படங்களை காட்ட சரணுக்கு யாரையும் பிடிக்க வில்லையாம். அதன் பிறகே மானு கண்ணில் பட்டிருக்கிறார். அஸ்ஸாமிலிருந்து அவரை வரவழைத்து பேசிய போது தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் பரத நாட்டியத்தில்தான் ஆர்வம் அதிகம் என்றும் கூறி சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்காக இணையும் ஒட்டுமொத்த கோடம்பாக்கம்! முக்கிய தகவலை பகிர்ந்த விஷால்
இருந்தாலும் சரணுக்கு எப்படியாவது மானுவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நேரடியாக மானுவின் அப்பாவிடமே பேசியிருக்கிறார். அவரது அப்பாவும் ஒத்துழைக்க ஒரு வழியாக மானு இந்தப் படத்தில் நடிக்க வந்தாராம். இந்த பழக்கத்தில் இருந்தே ஸ்பாட்டில் என்ன நடந்தாலும் என்ன தேவையானாலும் மானு சரணிடமே கேட்க, இது பத்திரிக்கைகளுக்கு கிசு கிசு எழுத உதவியாக இருந்தது என சரண் கூறினார்.