நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாரா நகுல்?!.. கூட நடிச்சவரே சொல்லிட்டாரே!...
Actor Nakul:வாஸ்கோடகாமா படத்தின் இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் சந்த்ரு. அவர்தான் நகுலை பற்றி சமீப காலமாக மீடியாக்களில் பேசி வருகிறார். அட்ஜஸ்ட்மென்ட்-க்கு நடிகையை அழைத்ததாகவும் ஏதேதோ வாங்கி வர சொன்னதாகவும் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு நகுலின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார் .
இதைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். வாஸ்கோடகாமா படத்தில் பயில்வான் ரங்கநாதனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இந்த படத்தின் இயக்குனரிடம் இதைப் பற்றி கேட்டபோது ‘உதவி இயக்குனர் சந்த்ரு தன்னிடம் வேலை பார்க்கவில்லை என்றும் படத்தின் பூஜை சமயத்தில் தான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்’ என்றும் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
இதையும் படிங்க: உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!…
அது மட்டுமல்லாமல் ஒரு சரியான கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக நகுல் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கிட்டு நடித்திருக்கிறார். படத்தில் நடித்த சுனைனா நகுலுடன் ஏற்கனவே சில படங்களின் ஜோடியாக நடித்தவர். அதனால் இந்த படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தான் அவரையும் நடிக்க வைத்தோம்.
இப்படி நகுலை பற்றி வந்த சர்ச்சைகள் எல்லாம் நகலுக்கு ஒரு பெரிய விஷயமாக இல்லை. அதுமட்டுமல்லாமல் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு நடிகை பிரகிடாவை தான் நகுல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாக கூறியிருந்தார். ஆனால் பிரிகிடா இந்த படத்திற்குள் வரவே இல்லை. அவரை வைத்து ஷூட்டிங் எடுக்கப்படவில்லை என்றும் அந்த இயக்குனர் கூறினாராம்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்தா இப்படி ஒரு கேள்வியா கேட்பீங்க? நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம்
ஆனால் ஆரம்பத்தில் படத்தில் பிரிகிடாவின் பெயர் லிஸ்ட்டில் இருந்தது உண்மைதான். ஆனால் ஹீரோவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகக்கூடிய நடிகையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் ஏற்கனவே அவருடன் நடித்த சுனைனாவை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம். மற்றபடி இந்த உதவி இயக்குனர் சந்த்ருவுடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் அந்த இயக்குனர் பயில்வான் ரங்கநாதனிடம் கூறினாராம்.
உடனே பயில்வான் ரங்கநாதன் வாஸ்கோடகாமா படத்தின் இயக்குனரிடம் ‘பேசாமல் அந்த சந்த்ரு மீது போலீசில் புகார் கொடுத்து விடுங்கள். நேரடியாக நடிகரின் பெயரையும் நடிகையின் பெயரையும் குறிப்பிட்டு அவர் இந்த மாதிரி பேசுவது சரியில்லை. அதனால் அவர் மீது புகார் கொடுத்து விடலாம்’ என கூறினாராம்.
இதையும் படிங்க: ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா… பங்ஷனுக்கு வரும் கோபி… திட்டு வாங்கும் தங்கமயில்..
இதையெல்லாம் தாண்டி இதில் சம்பந்தப்பட்ட நடிகையான பிரிகிடா தரப்பிலிருந்து இதைப் பற்றி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஒருவேளை அவரிடம் இருந்து நகுல் மீது இப்படி ஒரு புகார் வந்திருந்தால் இது உண்மை என நாம் நம்பலாம். ஆனால் அவர் எதுவுமே கூறாத பட்சத்தில் இது முழுக்க முழுக்க ஒரு தவறான தகவல் என பயில்வான் ரங்கநாதன் கூறுகிறார்.