கன்ஃபார்மா 10 படம்தான்! லோகேஷ் முடிவுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் – இந்தளவு வேதனையா?

Published on: October 8, 2023
loki
---Advertisement---

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.ஒவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்பிட்ட இயக்குனர்களின் தாக்கம் இருக்கும். அந்த காலத்தில் ஏசி. திருலோகசந்தர் போன்ற இயக்குனர்கள் இருந்த சமயத்தில் இளைஞர்களை மனம் கவர்ந்த இயக்குனராக சினிமாவிற்குள் வந்தார் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் படங்கள் பெரும்பாலும் காதல், நகைச்சுவை என இளசுகளை இழுக்கும் அளவுக்கு இருக்கும். அதன் பிறகு பாலசந்தர் பெரிய சாம்ராஜ்யத்தையே நிகழ்த்தினார். அவர் காலத்திற்கு பிறகு பாரதிராஜா 70களின் இறுதியில் இருந்து சினிமாவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..

இப்படி மணிரத்தினம், ஷங்கர் போன்ற பல இயக்குனர்கள் தங்களின் படைப்புகளுக்கு ஏற்ப ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இந்த நிலையில் வைலன்ஸ் தான் ஒரே தீர்வு என்பதை போன்று ஒரு தனி ராம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

அவர் எடுத்த படங்களில் ரத்தம், கொலை, துப்பாக்கி போன்ற அம்சங்கள் தான் பெரும்பாலும் இருக்கும். சமீபத்தில் வெளியான லியோ டிரெய்லர் கூட முழுவதும் ரத்தத்தை தெறிக்க விட்ட மாதிரியான போஸ்டரில் தான் வெளிவந்தன.

இதையும் படிங்க: இப்படி காட்டினா உடனே ஜூமிங்தான்!.. தாவாணி பாவாடையில் அழகை காட்டும் ஷிவானி

இந்த நிலையில் லோகேஷ் 10படங்களை மட்டும் இயக்கிவிட்டு அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்க போட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக முன்னாடியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் நிச்சயமாக 10 படங்களுக்கு பிறகு வேறு படங்களை இயக்கப் போவது இல்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட கூறியிருக்கிறார்.

அவர் எடுக்கும் 10 படங்களும் அவர் பேரை சொல்லும் படியாக இருக்க வேண்டுமாம். படிக்கும் போது கடைசி பெஞ்ச் மாணவராகத்தான் இருந்தாராம் லோகேஷ். அப்படி கடைசி மாணவரை தூக்கிக் கொண்டு போய் இப்படி ஒரு இடத்தை கொடுத்திருக்கிறீர்கள். இது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜோவிகா என் பொண்ணும் இல்ல.. அவர் பொண்ணும் இல்ல – திடீர் புரளியை கிளப்பி விட்ட வனிதாவின் Ex.கணவர்

அதாவது எப்போதுமே டென்ஷனிலேயே இருக்கிற மாதிரியான உணர்வை லோகேஷுக்கு ஏற்படுத்துகிறதாம். அதனால் இந்த 10 படங்களை எடுத்து முடித்த கையோடு இதுவரை எங்கும் செல்லாத ஊர்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.