Cinema News
‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு
தமிழ் சினிமாவில் ஒரு போற்றத்தக்க நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து கிட்டத்தட்ட ரஜினி, விஜய்க்கு நிகரான ஒரு அந்தஸ்தை பெற்று இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த சிவகார்த்திகேயன் சென்னைக்கு வந்து விஜய் டிவியில் ஒரு ஆங்கராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் மூலம் கிடைத்த வரவேற்பால் சினிமாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் துணை நடிகராகத்தான் தனுஷ் படத்தில் தனது கெரியரை ஆரம்பித்தார்.
இதையும் படிங்க : மகனின் தயவால்தான் வண்டியே ஓடுதா? பின்னாடி இருந்து ஆட்டுவிக்கும் மணிரத்தினத்தின் வாரிசு
அதனை தொடர்ந்து தனுஷின் உதவியாலும் ஹீரோவாக மாறினார் சிவகார்த்திகேயன். இப்போது மாவீரனாக நம் கண்முன் நின்று கொண்டிருக்கிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் தான் மாவீரன் படத்தை இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அதீதீ நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற அஸ்வின் இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை சரிதா, மிஷ்கின், போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் மாவீரன் படத்தின் கதைப்படி வானத்தில் இருந்து ஒரு அசரீரீ குரல் கேட்குமாம்.
அந்தக் குரல் என்ன சொல்கிறதோ அதை தான் சிவகார்த்திகேயன் கேட்டு நடப்பாராம். இதை அறிந்த கோடம்பாக்கத்தில் சிலர் அந்த குரலுக்கு சொந்தக்காரராக ஒரு வேளை இந்த நடிகராக இருக்குமோ இல்லை அந்த நடிகராக இருக்குமோ இல்லை கமலாகக்கூட இருக்கலாம் என ஆராய்ச்சி செய்து வந்தனர்.
ஆனால் அந்த குரலை கொடுத்திருப்பது விஜய் சேதுபதி என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த அசரீரீ குரலுக்கு சொந்தக்காரராக விஜய் சேதுபதி தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க : பெரிய நடிகர் ஒன்னும் கிடையாது! ஆனால் பேய் ஓட்டம் ஓடிய திரைப்படங்கள்