சமீபகாலமாக சிம்பு வெற்றிமாறன் படம் குறித்த செய்திதான் சமூக வலைதளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்தான் நடிக்க இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக இருந்தது. அதுதான் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு. இது சிம்பு ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக மாறியது.
ஆனால் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. புரோமோ வீடியோ ஒன்றைத்தான் படமாக்கினார்கள். ஆனால் படம் டிராப் ஆகிவிட்டது, சிம்பு அதிக சம்பளம் கேட்கிறார், வெற்றிமாறன் அதிக பட்ஜெட்டில் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார், அதனால் தாணு தரப்பில் கொஞ்சம் தயங்குகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெற்றிமாறன் இந்த படத்தை பற்றி ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
அவரிடம் சிம்பு படம் என்னாச்சு சார் என தொகுப்பாளர் கேட்க ‘கூடிய சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணிடுவோம். அதற்கான வேலையில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்’ என்று பதிலளித்திருக்கிறார் வெற்றிமாறன். இவர் சொன்னதிலிருந்து படம் டிராப் ஆகவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் கண்டபடி பேசி வருகின்றனர்.
தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வரும் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்தும் ஹிட்டை கொடுப்பாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது மட்டும் ஹிட்டாகிவிட்டால் சிம்புவின் இமேஜே வேற மாதிரி மாறிவிடும். தனுஷை வைத்து வெற்றிமாறன் தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்ததன் விளைவுதான் இப்போது தனுஷின் ரேஞ்ச் எங்கெயோ போய்விட்டது.
அதுமாதிரி சிம்புவுக்கும் வெற்றிமாறன் ஹிட் படத்தை கொடுக்கவேண்டும் என்றுதான் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
