Cinema News
Surya 44: சூர்யானு சொன்னா குடுப்பாங்கனு பார்த்தா இப்படி ஆகிப் போச்சே.. சூர்யா 44 பட தலைப்புக்கு வந்த சிக்கல்
Surya 44: என்னதான் ஒரு விமர்சனம் தன் மீது தொடர்ந்து வந்தாலும் அதைப் பற்றிய நினைத்துக் கொண்டு அடுத்த கட்ட வேலையை பார்க்காமல் இருக்க முடியுமா? அப்படித்தான் கங்குவா பட விமர்சனத்திற்கு பிறகு சூர்யா முடங்கி கிடைக்காமல் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்று அவருடைய 45 வது படத்தின் பூஜை பொள்ளாச்சியில் போடப்பட்டது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் இந்த 45 ஆவது திரைப்படம். தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். அது சூர்யா நடிக்கும் 44 வது திரைப்படம். இந்த படத்தை சூர்யாவின் 2d மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .
இதையும் படிங்க: சூர்யாவுக்குள் இருக்கும் அரசியல் ஆசை… அதனால தான் ஃபேன்ஸ்கிட்ட அப்படி சொன்னாரா?
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாக வைத்து படம் தயாராகி வருகிறது. அது மட்டுமல்ல இரட்டை வேடங்களில் சூர்யா இந்த படத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் சமீபத்திய ஒரு விழாவில் படத்தின் ரிலீஸ் மற்றும் படத்தை பற்றிய சில தகவல்களை கார்த்திக் சுப்புராஜ் கூறினார் .
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அதன் பிறகு ஊட்டியில் நடைபெற்றது. சூர்யாவின் பிறந்தநாளின் போது இந்த படத்தின் ஒரு சின்ன கிளிம்ஸ் வீடியோ வெளியானது.
அதில் சூர்யா சிகரெட் புகைத்த படி நடந்துவரும் காட்சி ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு கல்ட் என பெயர் வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்னோட செருப்பு சைஸ் 41!… எப்படி இங்க வச்சே அடிக்கவா?!… வேற லெவல் சம்பவம் செய்த குஷ்பு!..
ஒரு வித்தியாசமான தலைப்பாக இருக்க வேண்டும் என நினைத்து கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்திற்கு கல்ட் என பெயர் வைத்திருந்தாராம். இதை நடிகர் சங்கத்திடம் சொல்லும் போது அங்கு ஏற்கனவே இதே பெயரில் நடிகர் அதர்வா அவருடைய படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்தாராம் .சரி சூர்யாவின் படம் என்றால் அதர்வா அந்த தலைப்பை கொடுத்து விடுவார் என நம்பி ஆதர்வாவிடம் போய் கேட்டிருக்கின்றனர்.
ஆனால் அதர்வா என்னுடைய படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப இந்த டைட்டில் தான் சரியாக இருக்கும் எனக் கூறி அந்த தலைப்பை தர மறுத்து விட்டாராம். அதன் பிறகு சூர்யா 44ஆவது படத்திற்கு வேறொரு தலைப்பை படக்குழு தேடி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.