செகண்ட் சிங்கிள் லேட்டானதுக்கு காரணம் இதுதானா? அனிருத்துக்கும் விஜய்க்கும் இடையே இப்படி ஒரு மோதலா?

Published on: October 2, 2023
aniruth
---Advertisement---

Leo Movie: தமிழ் சினிமாவில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது நடிகர் விஜயின் நடிப்பில் தயாராகியிருக்கும் லியோ படத்தை பற்றித்தான். ஒரு பக்கம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காமல் ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டது.

இன்னொரு பக்கம் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்த பாடல் வரிகளில் இனிமேல் விஜயின் மிருகத்தனமான முகத்தை பார்க்கப் போகிறீர்கள் என்பது மாதிரியான வரிகள் இடம்பெற்றிருக்கும்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

இது ஜெயிலர் படத்தில் ரஜினியின் ஹுக்கும் பாடலுக்கு எதிராக பதிலடி கொடுத்த மாதிரியான ஒரு போக்காகவே பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சில தினங்களாகவே விஜய்க்கும் அனிருத்துக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் அப்படி இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். ஏற்கனவே லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்பவோ வெளிவர வேண்டியதாம். அனிருத்தின் அலட்சியத்தினால்தான் பாடல் வர தாமதமாகிவிட்டதாம்.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி: தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!

இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தில் ஹுக்கும் பாடலில் எப்படி விஜய்க்கு எதிரான கருத்துக்களை கொண்ட வரிகளை வைப்பதற்கு அனிருத் ஒப்புக்கொண்டார். ஒரு படத்தில் இயக்குனரையும் தாண்டி இசையமைப்பாளருக்கு ஒரு பவர் இருக்கிறது.

நினைத்திருந்தால் அந்த வரிகளை இடம்பெற விடாமல் அனிருத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இதுவும் விஜய்க்கு ஒரு பெரும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: பிரியங்கா மோகனுக்கு பதிலா அந்த நடிகையா?!.. உனக்கு மனசாட்சி இருக்கா தல!.. தளபதி 68 பரபர அப்டேட்..

எப்படி இருந்தாலும் எல்லா பிரச்சினைகளுக்கும் அக்டோபர் 19ஆம் தேதி விடை தெரிந்து விடும். அதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லர் வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.