சாமானியன் படத்தின் ரிலீஸையொட்டி இணையதளத்தை எங்கு தட்டினாலும் ராமராஜன் தான் புரொமோஷனுக்கு வருகிறார். 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் படத்தில் ராமராஜனுக்காக இசை அமைக்கிறார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இனி ராமராஜன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
சாமானியன் படத்தை யாரும் கணிக்க முடியாது. கதை இப்படித்தான் போகும்னு யாராலும் சொல்ல முடியாது. அதிலும் இன்ட்ரோவை யாரும் இதுவரை இப்படிக் காட்டுனது இல்ல. இந்தப் படத்துல ராமராஜன் ரொம்ப டெக்னிக்கலா டீல் பண்றாரு. ஐ பேட டீல் பண்ணுவாரு. நல்ல அப்டேட்டடா இருக்காரு.
இதையும் படிங்க… நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..
இளையராஜா வர்றதுக்கு முன்னாடி எங்க பார்த்தாலும் இந்தி பாட்டுத் தான் ஓடும். ஆனா அவரு வந்ததுக்கு அப்புறம் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ன்னு பாட்டு போட ஆரம்பிச்சிட்டாங்க. ’16 வயதினிலே’ படத்துல ‘சோளம் விதைக்கையிலே’ பாட்டைக் கேட்டதும் ‘யப்பா என்ன குரலு’ன்னு எனக்குத் தோணுச்சு. மண்ணுக்கேத்த பொண்ணு படத்துல ராஜா சார் தான் டைட்டில் சாங் பாடணும்னு அடம்பிடிச்சேன். அன்னைக்கு அவர் நான் டைரக்ட் பண்ண படத்துக்குப் போட்ட பாட்டு, இன்னைக்கு வரைக்கும் அவர் பாட்டுல தான் என் படம் ஓடிக்கிட்டு இருக்கு.
சாமானியன் படத்துல எனக்கு ஜோடி இல்ல. எனக்கு ஜோடி யாருன்னா ரைட்ல ராதாரவி, லெப்ட்ல எம்.எஸ்.பாஸ்கர். எனக்கு அது போதும்னு சொல்றேன். பர்ஸ்ட் ஆப்ல பாட்டு இல்லை. காமெடி இருந்தா கதை கெட்டுப்போயிடும்னு அதையும் விட்டுட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… சிவாஜி எப்படி கதையை தேர்ந்தெடுப்பார் தெரியுமா?!.. ரஜினி, விஜய், அஜித் இவர்கிட்ட கத்துக்கணும்!..
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள இந்த சாமானியன் படம் மே 23 அதாவது வரும் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரீ என்ட்ரியில் ராமராஜனும், மோகனும் வந்துள்ளார்கள். யார் பிக்கப் ஆகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…