லியோ டிரெய்லருக்கு வந்த ஆப்பு!.. ஓவர் ஆட்டம் போட்டா இப்படித்தான்!. அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!.

இளைய தளபதி விஜய் நடிப்பில் இந்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளனர். பொதுவாக எந்தவொரு படமானாலும் திரைக்கு வருவதற்கு முன் அதற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இதையும் வாசிங்க:தல தளபதி இணையும் புதிய படம்! சூப்பரான தகவலை வெளியிட்ட ஷோபா சந்திரசேகர் – ரெமோ லுக்கிற்கான ரகசியம் இதுதானா?
அதைபோலவே இப்படத்திற்கும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பலவித கருத்துகளும் உலாவின.
இந்நிலையில் விஜய் தனது படக்குழுவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்த திட்டமிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனல், அது நடக்கும் அறிகுறியே தென்படவில்லை. இவ்வாறு தொடர் பிரச்சினையை சந்தித்து வரும் லியோ திரைப்படம் தற்போதும் ஒரு புதிய பிரச்சினையை சந்தித்துள்ளது. பொதுவாக எந்தவொரு படமானாலும் அதன் டிரெய்லர் யூடியூப் போன்ற சமூக வலைதளத்தில் ரிலீஸ் செய்வதுதான் வழக்கம்.
இதையும் வாசிங்க:இத்தனை பெண்களுடன் காதலா? கேள்வி கேட்ட நிரூபருக்கு சாட்டையடி பதில் கூறிய கமல்
ஆனால் இப்படத்தின் டிரெய்லரை ரோகினி தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் திறந்தவெளியில் வெளியிட தியேட்டர் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே இதற்குமுன் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோது ரசிகர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு லாரி முன் விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளனர்.
அதன்படி இந்த மாதிரியான டிரெய்லர் ரிலீஸுக்கு பொதுவாக லோக்கல் போலிஸாரே அனுமதி கொடுக்கும் நிலையில் இப்படத்திற்கான டிரெய்லர் ரிலீஸுக்கு காவல் ஆணையரை சந்திக்கும்படி கடிதம் அனுப்பியுள்ளனர். இது தற்போது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் வாசிங்க:தான் வயிறு நிறைஞ்சா மட்டும் போதுமா? சூடுபிடிக்கும் விஜயின் சம்பள பிரச்சினை – சுத்தி சுத்தி கோல் அடிச்சா எப்படி?