Cinema History
இவன்தான் என் ஹீரோ!. இல்லனா படமே வேண்டாம்!.. பாரதிராஜா சொன்னதன் பின்னணி இதுதான்!..
நடிகர் பாண்டியன் மண்வாசனை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். 80களில் நல்ல குணத்தால் அனைவரையும் கவர்ந்த நடிகர். அவர் சினிமாவில் நுழையும் போது என்னென்ன சவால்களை சந்தித்தார் என்று பார்ப்போம்.
பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் மேற்கொண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் தந்தையின் வளையல் கடையில் வேலை பார்த்தாராம். பாரதிராஜாவின் படங்களைப் பார்த்து அவரது ரசிகராகவே மாறிவிட்டாராம். 1982ல் பாரதிராஜா மண்வாசனை எடுக்க மதுரை வந்தாராம்.
இதையும் படிங்க… ஒரே ராத்திரியில் நடந்த சம்பவம்!.. விஜய் சும்மா ஓடிக்கிட்டே இருப்பாரு!.. பெப்ஸி விஜயன் பேட்டி!..
அப்போது தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதாநாயகனைத் தேடி அலைந்தாராம். மதுரையில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு சித்ரா லெட்சுமணனும், பாரதிராஜாவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்களாம்.
அப்போது அவரைப் பார்த்ததும் ஆட்டோகிராப் வாங்க பெரிய கூட்டமே வந்ததாம். அப்போது பாண்டியனும் அந்தக் கூட்டத்தில் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம். பளிச்சென்று தெரிந்த அவரது முகத்தைப் பார்த்ததும் பாரதிராஜா அவர் தான் கதாநாயகன் என்று முடிவு பண்ணிவிட்டாராம்.
இதுகுறித்து பாண்டியனிடம் பாரதிராஜா பேச, நடிப்பு என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது என்றாராம். அப்போதே பாண்டியனுக்கு சில டெஸ்ட்டுகளை வைத்தாா் பாரதிராஜா. அதில் தேர்ச்சி பெற்றதும் பாண்டியனை மறுநாள் போடி நாயக்கனூர் வருமாறு சொன்னாராம்.
சித்ரா லெட்சுமணனுக்கு பாண்டியனை கதாநாயகனாக்க துளி கூட விருப்பமில்லையாம். சாதாரண தோற்றம் உள்ளவன் நமது படத்துக்கு ஹீரோவா என்று நினைத்தாராம். அப்போது இவனை எல்லாம் ஹீரோவா போட்டா படம் குளோஸ்னு இயக்குனரின் காதுபட பலரும் பேசினார்களாம். உடனே பாரதிராஜா இவன் தான்யா என் படத்தோட ஹீரோ.
சூட்டிங் போறோம். இல்லாட்டி எல்லாத்தையும் பேக்கப் பண்ணி கிளம்புங்க. எல்லோரும் எதிர்பார்க்கும் நல்ல ஹீரோ எப்போ கிடைக்கிறானோ, அப்போ சூட்டிங் வச்சிக்குவோம் என்று கோபத்தில் சொன்னாராம் பாரதிராஜா. இது தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணனுக்குத் தூக்கி வாரிப்போட்டதாம்.
உடனே இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு சூட்டிங் ஆரம்பித்தோம். இந்த வாய்ப்பும் போய் விட்டால் பிறகு இவரை எப்படி பிடிப்பதுன்னு உடனே தயாரிப்பாளர் சம்மதித்து விட்டாராம்.