இந்த படம் ரிலீஸ் ஆனா நான் புடவை கட்டிக்கிறேன்.. எம்.ஜி.ஆர் கிட்டயே சவால்விட்ட விநியோகஸ்தர்!..

Published on: May 20, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். நடிகர் என்பதையும் தாண்டி அரசியல் தலைவராக பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்றவராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் அப்போது பெரும் ஹிட் கொடுத்த படங்களில் முக்கியமான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆரே இயக்கி நடித்த திரைப்படம் இது. மேலும் உலகம் முழுக்க சுற்றி அப்போதே பெரும் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது.

MGR
MGR

அந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அந்த சமயத்தில் படத்தை வெளியிடுவதில் நிறைய சிக்கல்களை சந்துத்துள்ளார் எம்.ஜி.ஆர், இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

படம் வெளியாவதில் பிரச்சனை:

அப்போது எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்குமிடையே பிரச்சனை இருந்தது. உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகும் சமயத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவர் அந்த படத்தை வெளியிடாமல் செய்ய பல விஷயங்களை செய்தார் என கூறுகிறார் சபிதா ஜோசப்.

இதனால் அப்போது அந்த படத்தை எந்த திரையரங்குகளும் வாங்கவில்லை. இந்த நிலையில் அப்போது மதுரை பக்கம் விநியோகஸ்தராக  முத்து என்பவர் இருந்தார்.  அவர் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் நான் புடவை கட்டி கொள்கிறேன் என பகீரங்கமாக கூறியுள்ளார்.

ஆனால் பல வித தடைகளையும் தாண்டி உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது. நினைத்ததை விட அந்த படம் பெறும் வசூலை அடைந்தது. அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் விநியோகஸ்தர் முத்துவிற்கு புடவையை கூரியரில் அனுப்பியுள்ளனர். இப்படியாக 500க்கும் அதிகமான புடவைகள் அவரது முகவரிக்கு வந்தன என பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த ஒரு ஆங்கில வார்த்தை!.. பேசமுடியாமல் திகைத்த விஜயகாந்த்.. கலைஞர் வீட்டு விழாவில் நடந்த காமெடி சம்பவம்..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.