நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் இவர்கள்தான்.. கொஞ்சம் இவங்களயும் கண்டுக்கோங்க பாஸ்!..
இன்றைய தமிழ் சினிமாவின் போக்கே சற்று வித்தியாசமானதாகவே இருக்கின்றது. படம் எடுக்க வரும் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவர்களை வைத்து படம் எடுத்தால் எந்த அளவுக்கு லாபம் வரும், எந்த அளவுக்கு வசூலாகும் என்பதை மட்டுமே பார்க்கிறார்களே தவிர கதையின் கருவை உற்று நோக்குவதில்லை.
அவர்கள் மட்டும் இல்லை , சில நடிகர்களும் அதே அணுகுமுறையில் தான் இருக்கிறார்கள். சில நேரங்களில் கதையின் உள் அர்த்தம் என்ன? படம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் மாஸுக்காக நடித்து விடுகின்றனர். ரசிகர்களை பெரும்பாலும் இந்தப் பார்வைக்கு கொண்டு போவதே அவர்கள் தான்.
கொஞ்சம் வித்தியாசமாக நல்ல கதையோடு படம் வந்தால் கண்டிப்பாக ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் லைசண்டாக இருந்து நல்ல கதைகளத்தோடு மக்களிடம் ஸ்கோர் செய்யும் நடிகர்களின் லிஸ்ட் தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். ஆனால் சினிமா தரப்பில் இருந்து அவர்களை கொண்டாட மறந்து விடுகின்றனர். அதில் முதலில் நாம் பார்க்கப் போவது,
நடிகர் கதிர்: எல்லா வித ஜோனர்லயும் நடிக்கக் கூடிய வளர்ந்து வரும் சூப்பரான நடிகர் தான் கதிர். முதல் படத்திலேயே காதல், கோபம் என அனைத்து உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருப்பார். மதயானைக் கூட்டம் தான் இவர் நடித்த முதல் படம். கிருமி, விக்ரம் வேதா, பரியேரும் பெருமாள், சிகை, பிகில், ஜடா, சுழல் என அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைகளத்தோடு நடித்து மக்களிடம் தனி வரவேற்பையே பெற்றிருக்கிறார் கதிர்.
நடிகர் அருள்நிதி: திரில்லர் படங்களுக்கு பேர் போனவர் தான் நம்ம அருள்நிதி. மெதுவாக பேசுனாலும் இவரின் நடிப்பில் அனல் பறிக்கும் உணர்வுகள், கோபங்கள் , பாசம் என அனைத்து வகையான ஜோனர்களையும் வெளிப்படுத்துவார் அருள்நிதி. அவனுக்கு மட்டும் நல்ல நல்ல கதைகள் கிடைக்கிறது என்று உதயநிதியே பொறாமை படும் அளவிற்கு வித்தியாசமான கதையில் நடித்து ஸ்கோர் செய்தவர் அருள்நிதி. இவர் நடித்த 15 படங்களில் 9 படங்கள் திரில்லர் படங்கள் தான். ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் இருக்கும், போர் அடிக்காமல் கதையை நல்ல விதத்தில் கொண்டு போகக் கூடிய நடிகர்.
நடிகர் விஷ்ணுவிஷால்: எல்லா வகையான ஆக்டிங்கிற்கும் பொருத்தமான ஒரே நடிகர் விஷ்ணுவிஷால் தான். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கிஃப்ட் என்றே சொல்லலாம். வெண்ணிலா கபடிக் குழு, நீர்ப்பறவை, சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி வரைக்கும் எல்லா வகையான கெட்டப்கள், வெரைட்டியான ஸ்கிர்ப்ட்கள் என தனி ரசிகர்களை வைத்து கெரியரை நகர்த்திக் கொண்டு போகும் சிறந்த நடிகர் விஷ்ணு விஷால்.
இதையும் படிங்க : எல்லாப் புகழும் விஜய்க்கே!.. தளபதி – 67ல் இந்த நடிகருக்கு வாய்ப்பு இல்லப்பா!..
நடிகர் விஜய்ஆண்டனி: தான் வைக்கும் படங்களின் பெயர் மூலமாகவே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் என்ன நடிக்கிறாரு? எப்படி நடிக்கிறாரு? என்று கிண்டல் பண்ணுகிறவர்கள் மத்தியில் இவருக்கு என்று தனி ஃபேன்ஸ் ஃபாலோயிங்கை வைத்து மாஸ் காட்டி வருகிறார். பிச்சைக்காரன், எமன், நான் என வித்தியாசமான பெயர்களால் விதவிதமான கதைகளத்தோடு மக்களை ரசிக்க வைத்துக் கொண்டு வருகிறார். நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று பிற்காலத்தில் சொல்லும்படியாக வைக்கக்கூடாது, மனதில் என்ன நினைத்தோமோ அதை உடனயே செய்துவிட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் விஜய் ஆண்டனி, அவரின் மோட்டோவே இது தான்.
நடிகர் அருண்விஜய்: ஆரம்பத்தில் ஏகப்பட்ட சறுக்கல்கள் இருந்தாலும் சினிமாவை பற்றி நல்ல புரிதலுடன் தெளிவாக யோசித்து சரியான நேரத்தில் வந்து மாஸ் காட்டிக் கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய். படத்திற்கு படம் வித்தியாசம் என விதவிதமான கான்சப்ட்களில் நடித்து மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் அருண்விஜய். இப்படி கவின், விதார்த், அட்டகத்தி தினேஷ் என எக்கச்சக்க நடிகர்கள் அதுவும் வளரும் நிலையில் இருக்கின்றனர்.
அவர்களை எல்லாம் தமிழ் சினிமா கண்டு கொள்வதே இல்லை. பல கோடிகளை கொண்டு போய் ஒரு நடிகருக்கு வாரி இறைக்கும் தமிழ் சினிமா அதை வைத்து இந்த மாதிரி இருக்கும் நடிகர்களை வைத்து 5 படங்கள் வரை எடுக்கலாமே? இந்த அணுகுமுறையை கொஞ்சம் மாற்றினால் பல நல்ல நல்ல கதைகளில் ஏகப்பட்ட படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிறு படங்கள் அதிக லாபத்தை எட்ட முடியாமல் திணறுகின்றது. காரணம் ரசிகர்கள் பார்வையை சினிமா மாற்றியது தான்.