சுதா கொங்கராவுக்கு கதை எழுதவே தெரியாது!.. அவங்களே சொன்ன விஷயம்.. அப்போ அந்த 2 படங்கள் எழுதியது யாரு?
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுக்கு சொந்தமாக கதையே எழுத தெரியாது. அடுத்தவர்களின் கதையை ஆட்டையப் போட்டு திரைக்கதை எழுதி படமாக்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருவது காலம் காலமாக இருக்கத்தான் செய்கிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பல ரீமேக் படங்களை தேர்வு செய்து நடித்தே முன்னணி நடிகர்களாக மாறியுள்ளனர்.
இதையும் படிங்க: மனிஷாவுக்கு ரகசியமா போன் போட்ட சீனு ராமசாமி!.. ஒட்டுமொத்த அசிங்கத்தையும் அம்பலப்படுத்திட்டாரு!..
முன்னணி பெண் இயக்குனராக வலம் வரும் சுதா கொங்கராவுக்கும் சொந்தமாக திரைக்கதை எழுத தெரியாது என்றும் அவர் இயக்கிய துரோகி படம் தோல்வியடைந்த நிலையில், இறுதிச்சுற்று படத்துக்கும், சூரரைப் போற்று படத்துக்கும் திரைக்கதை, வசனம் எழுதியது இந்த இரு இயக்குனர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை இயக்குனர் சுதா கொங்கராவே ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கதை எழுதவே தெரியாது என்றும் எழுத்தில் தான் ரொம்பவே வீக் என்றும் ஆனால், நல்ல கதை எழுதுவதால் மட்டும் ஒருவர் சிறந்த இயக்குனராக முடியாது என்றும் இது விஷுவல் மீடியம் நன்றாக இயக்கத் தெரிந்த தனக்கு யார் கதை எழுத உதவினாலும் அவக்ரளுக்கான அங்கீகாரத்தை வழங்கி விட்டு படம் பண்ணுவேன் என பேசிய வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆறடி ஐஸ்க்ரீமா உருக வைக்கும் யாஷிகா ஆனந்த்!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..
துரோகி படத்துக்கு பிறகு சுதா கொங்கராவுக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது இறுதிச்சுற்று படம் தான். அந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியது வேறு யாரும் இல்லை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான். ராக்கி, சாணிக் காயிதம் விரைவில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படங்களின் இயக்குனர் தான் அவர்.
அதே போல சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியது உறியடி பட இயக்குனர் விஜயகுமார் தான். சூர்யா 43 படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி கதை, திரைக்கதை எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.