ஒரு காலத்தில் தமிழ் நாட்டு மக்களையே தனது நடிப்பால் கட்டி இழுத்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் இவர் திரையில் நடிக்கும் நல்ல நல்ல கதாபாத்திரங்களை பார்த்து மக்கள் உண்மையிலே எம்.ஜி.ஆரின் குணாதிசியங்கள் இது தான் என நம்பினார்கள். அதனால் அவரை தமிழகத்தை ஆளும் முதல்வராகவும் தேர்ந்தெடுத்தார்கள்.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் தான் அவர் முதன் முதலில் நடித்தார். வில்லன் நடிகரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கி அரசியலில் அடித்தளம் போட்டு தமிழ்நாட்டையே ஆண்டு வந்தார்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளராக டாக்டர் கந்தராஜ், எம்ஜிஆர் திரைப்படங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது எம்ஜிஆர் படத்தில் கதை இருந்ததா இல்லையா என்பதே தெரியாது. ஆனால் பாடல், கவர்ச்சி இது ரெண்டும் படத்துக்கு படம் திட்ட திகட்ட கட்டியிருப்பார்கள். அது தான் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அடித்தட்டு மக்களாக இருந்தவர்கள் பலர் நாமும் எம்ஜிஆர் போல் ஆகலாம் என கனவு கண்டார்கள். இது தான் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என அவர் கூறியுள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…