Connect with us

‘தேவர் மகன்’ சென்று “முதலியார் மகன்” வந்துவிட்டது.! வரிசைகட்டும் புது புது பிரச்சனைகள்.!

Cinema News

‘தேவர் மகன்’ சென்று “முதலியார் மகன்” வந்துவிட்டது.! வரிசைகட்டும் புது புது பிரச்சனைகள்.!

சுந்தர்.சி-யை நடிகராக தான் தற்போதைய தலைமுறைக்கு தெரிந்திருக்கும். ஆனால், அவர் திறமையான இயக்குனர் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். அவர், இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகலப்பு கலகலப்பு 2 , தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை (1, 2 ,3 )ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி திரைப்படங்கள் என்று நிரூபித்து வருகிறது.

sundar c

இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி தான் நடித்து வந்த ‘தலைநகரம்’ இரண்டாம் பாகம் படத்தை முடித்துவிட்டு தற்போது தனது இயக்கத்திற்கான பணியை தொடங்கி உள்ளார்.

இதையும் படிங்களேன்-

என்னை அறியாமல் இதை செய்துவிடுகிறேன்.! ரஜினி கூறிய ‘அந்த’ ரகசிய பழக்கம்.!?

சுந்தர்.சி தற்போது இயக்க உள்ள புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘முதலியார் மகன்’ என பெயர் வைத்துள்ளனராம். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

sundar c

இப்படம், ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும். ஆனால், அதற்கு தேவர் மகன் என பெயர் வைக்கப் போவதில்லை என கமல்ஹாசனே ஒரு சமயம் பேட்டியில் கூறியிருந்தார். ஏன் என்றால் ஜாதி பெயர் வைத்தால் பிரச்சனை வரும் என அவர் நினைத்திருந்தார்.

sundar c

ஆனால், தற்போது சுந்தர் சி தனது படத்திற்கு ‘முதலியார் மகன்’ என ஜாதி பெயரை மையப்படுத்தி தற்காலிகமாக வைத்துள்ளார். நிச்சயமாக இந்த தலைப்பை பயன்படுத்த மாட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை படம் வெளியானால் நிச்சயம் பிரச்சனை வரும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top